(எம்.மனோசித்ரா)
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் நாடகமொன்றை அரங்கேற்றி சட்டமா அதிபர் மீது அழுத்தம் பிரயோகித்து அவரை பதவி விலகச் செய்வதே அரசாங்கத்தின் சூழ்ச்சியாகும்.
சட்டத்துறையில் அரசியல் தலையீடுகளை செலுத்தாமல் விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இடமளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
கொழும்பில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை வலியுறுத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது ஜனாதிபதிக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ அழுத்தம் பிரயோகிக்க முடியாது.
அந்த வகையில் எந்தவொரு வழக்கு விசாரணைகளையும் துரிதப்படுத்துமாறும் உத்தரவிடவும் முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தில் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் அந்த விசாரணைகளை முன்னெடுத்து வந்த ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்டோர் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக லசந்த கொலை தொடர்பில் நல்லாட்சியின் போது விசாரணைகளை முன்னெடுத்ததைப் போன்று, அந்த நடவடிக்கைகளை தற்போது மீண்டும் ஆரம்பிக்குமாறு ஷானி அபேசேகரவைக் கோருகின்றோம்.
15ஆண்டுகளின் பின்னராவது லசந்தவுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
இது இவ்வாறிருக்க மறுபுறத்தில் அரசாங்கம் சட்டமா அதிபரை பதவி நீக்குவதற்கான சதித்திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. அதற்காக லசந்தவின் மகள் சட்டமா அதிபருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருமாறு எழுதிய கடிதத்தைப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் முற்படுகிறது.
சட்டமா அதிபருக்கு அழுத்தம் பிரயோகித்து அவரை பதவி விலகச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இது முற்று முழுதாக தவறான விடயமாகும். சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளில் சில குறைபாடுகள் இருக்கலாம்.
எனினும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன. அதனை விடுத்து சட்டமா அதிபர் திணைக்கள செயற்பாடுகளை அரசியல் மயமாக்குவது பொறுத்தமற்றது.
லசந்தவின் மகள் மற்றும் மனைவியைப் பயன்படுத்திக் கொண்டு நாடகமொன்றை அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. நாம் இதனை வெளிப்படுத்த நடவடிக்கை எடுத்ததால் தான் அரசியல் நெருக்கடிகளின் போது வன்முறைகளால் தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளுக்காக பெற்றுக் கொண்ட இழப்பீட்டு பெயர்
பட்டியலை வெளியிட்டு அரசாங்கம் மக்களை திசை திருப்புகிறது. இதன் முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டிருக்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM