வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம் - இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம் விசனம்

Published By: Digital Desk 2

08 Feb, 2025 | 11:30 PM
image

(நா.தனுஜா)

அண்மையில் தூதரகப்பணியகத்தலைவர் பதவிக்கு மேற்கொள்ளப்பட்ட பல நியமனங்கள் இலங்கை வெளிநாட்டு சேவையிலிருந்தல்லாமல் வெளிவாரியாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம், இதனூடாக தொழில்வாண்மை, தகுதி மற்றும் இராஜதந்திர நிபுணத்துவம் என்பன தொடர்பில் நிறுவப்பட்டிருக்கும் விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

 உலக அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அதீத அர்ப்பணிப்பு, அனுபவம், நிபுணத்துவம் மற்றும் தொழில்வாண்மை மிகுந்த வெளிநாட்டு சேவை அதிகாரிகளைப் புறக்கணித்துள்ள இந்நியமனங்களால் நாம் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம். இலங்கை வெளிநாட்டு சேவை என்பது குறிப்பாக நாட்டின் வெளியுறவுக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும், அதன் சர்வதேச நலன்களைப் பாதுகாப்பதற்கும் விசேடமாகப் பயிற்சியளிக்கப்பட்ட தேர்ச்சிமிக்க அதிகாரிகளின் தொகுதியாகும். அவ்வாறிருக்கையில் அரசியல் நியமனங்களால் தொழில்வாண்மை மிகுந்த இராஜதந்திரிகளைத் தவிர்ப்பதானது, நிறுவன ஒருமைப்பாட்டைப் பலவீனப்படுத்துவதுடன் இலங்கையின் இராஜதந்திர அந்தஸ்தை நலிவடையச்செய்யும்.

வெளிநாடுகளிலுள்ள தூதரகப்பணியகங்களுக்குத் தலைமை வகிப்பதற்கு உயர் தொழிற்தகைமை கொண்ட இராஜதந்திர அதிகாரிகளை நியமித்தல், வெளிநாட்டு சேவையை அரசியல்மயமாக்கமின்றி தகுதி அடிப்படையில் நியமனங்களை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்த தற்போதைய அரசாங்கம், அதற்கு முற்றிலும் முரணான விதத்தில் செயற்படுகின்றது.

இவ்வாறு அரசியல் செல்வாக்கு மூலமான நியமனங்களைத் தொடர்வது இலங்கையின் இராஜதந்திர உத்தியோகத்தரணியின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்புக்கு உட்படுத்துவதுடன், தீவிர பயிற்சி பெற்றவர்களும், பரந்துபட்ட சர்வதேச அனுபவத்தைக் கொண்டவர்களுமான தொழில்வாண்மை மிகுந்த இராஜதந்திர அதிகாரிகளை மனந்தளரச்செய்கிறது.

இத்தகைய நடைமுறை முடிவுக்குவரும் எனவும், அரசியல் செல்வாக்கை விட நாட்டின் நலனை முன்னிறுத்தி சேவையாற்றும் வலுவானதும், சுதந்திரமானதுமான வெளிநாட்டு சேவை ஊக்குவிக்கப்படும் எனவும் நாம் நம்பியிருந்தோம். ஆனால் இந்நிலை தொடர்வது வெளிநாட்டு சேவைக்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்நியமனங்களை மறுபரிசீலனை செய்யுமாறும், தகுதி அடிப்படையிலான தேர்வுகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். அதுமாத்திரமன்றி தொழில்வாண்மை, சுயாதீனத்துவம் மற்றும் செயற்திறன்மிக்க வெளிநாட்டு சேவைக்கு முன்னுரிமை அளிக்குமாறும் நாம் கேட்டுக்கொள்கிறோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25