தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வட்டகொட நகரில் இடம்பெற்ற பஸ்- முச்சக்கரவண்டி விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற அரச பஸ் வண்டியும் எதிர்த்திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்த  முச்சக்கரவண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார மேற்கொண்டு வருகின்றனர்.