நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திலிருந்து தலவாக்கலை நோக்கி புறப்பட்ட தனியார் பஸ்ஸில் நானுஓயா பிரதான நகரில் அமைந்துள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி பஸ்ஸில் ஏறியவர்கள் பஸ்ஸின் பின் பகுதியில் உள்ள டிக்கியில் வைத்திருந்த சில பயணிகளின் பெறுமதி வாய்ந்த அத்தியாவசிய பொருட்களை கொள்ளையிட்டுக் கொண்டு நானுஓயா கிளரண்டன் பகுதியில் இறங்கி சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பொருட்களை கொள்ளையிட்டு கொண்டு பஸ்ஸின் டிக்கி கதவினை உரிய முறை மூடாமல் சென்றமையால் சுமார் 200 மீற்றர் தூரம் சென்றதன் பின்னர் குறித்த பஸ்ஸின் பின்னால் வருகை தந்த வேனின் சாரதி ஒருவர் பஸ்ஸை முந்தி சென்று பஸ் சாரதியிடம் பின்பகுதியில் உள்ள டிக்கி கதவு திறந்து இருப்பதை தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பஸ்ஸினை நானுஓயா டெஸ்போட் பகுதியில் வீதி ஓரமாக நிறுத்தி சாரதி, நடத்துனர், மற்றும் பயணிகள் இறங்கி பார்த்த போதே டிக்கியில் வைத்திருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட் சம்பவம் தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் அருகில் இருந்த நானுஓயா பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி சம்பவ இடத்திற்கு வரவழைத்து பஸ்ஸில் பொருட்கள் வைத்தவர்கள் தங்களுடைய முறைப்பாட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.
இதில் ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக நானுஓயா கிளாரண்டன் பகுதிகளில் இருந்து மாலை நேரங்களில் பஸ்ஸினை பயன்படுத்தும் பயணிகள் சிலர் தொடர்ந்து இவ்வாறான சமூக சீர்கேடான நாசகார செயற்பாடுகளை செய்து வருவதாகவும் இது தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்திற்கு அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM