(நா.தனுஜா)
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட முக்கிய விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கிறதா என அவதானிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜுலி கொஸாக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது ஊடக சந்திப்பு கடந்த வியாழக்கிழமை வொஷிங்டனில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கைக்கான அடுத்தகட்ட நிதி எப்போது விடுவிக்கப்படும் எனவும், அரசாங்கத்தினால் எதிர்வரும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் நிலையில், அதனைத் தயாரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்தினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டனவா எனவும் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஜுலி கொஸாக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வை அடுத்து, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி எட்டப்பட்டது. அந்த உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு நாணய நிதியத்தின் இயக்குனர் சபை அனுமதியளித்ததன் பின்னர் இலங்கைக்கு 333 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும்.
அதன்படி எதிர்வரும் வாரங்களில் இயக்குனர் சபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம். அதேவேளை இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மறுசீரமைப்பு செயற்திட்டம் தற்போது வரவேற்கத்தக்க பெறுபேறுகளைத் தந்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். குறிப்பாக 2024 இன் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதத்தினால் விரிவடைந்தது. அத்தோடு அக்காலப்பகுதியில் பணவீக்கமும் இலக்கிடப்பட்டதை விடவும் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமதி 6.1 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்தது.
அதேபோன்று கடந்த நவம்பர் மாதம் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு நாணய நிதிய இயக்குனர் சபையின் அனுமதி பெறப்படவேண்டும். இருப்பினும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் உள்ளடக்கங்களுக்கு ஏற்புடைய விதத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தை சமர்ப்பித்தல் உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM