வவுனியா மரக்காரம்பளை பகுதியில் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்ட  வயோதிபர் ஒருவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மரக்காரம்பளை பகுதியில் நேற்று மாலை மதுபான சாலையில் மது போத்தல்களை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள குளப்பகுதியில் மது அருந்திய கும்பல் ஒன்று மது அருந்திய பின் அருகிலிருந்த காணியில் காணப்பட்ட பாலை மரத்தில் பாலைப்பழம் பறிப்பதற்காக அம்மரத்தை தறிக்க முற்பட்ட வேளையில் காணியின் உரிமையாளர் மரம் தறிப்பதை தடுக்க முயன்ற போது அக்கும்பலால் தாக்கப்பட்ட கிருபானந்த மூர்த்தி வயது 58 என்ற முதியவர், தலையில் பலமாக அடிபட்டதன் காரணமாக  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது சகோதரரான சத்தியமூர்த்தி வயது 56 என்பவரும் தாக்குதல் சம்பவத்தை தடுக்கமுயன்றபோது குறித்த கும்பலால் தாக்கப்பட்டு சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மதுபானசாலையால்  குறித்த பிரதேசத்தில் பல சமூக சீர்கேடுகள் அதிகமாக இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.