இதயத்திற்கு சுத்தமான குருதியை எடுத்துச் செல்லும் கரோனரி தமனி எனும் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவுகள் ஏற்பட்டு இரத்த ஓட்டம் தடைப்பட்டால் இதய பாதிப்பு ஏற்படும். இது போன்ற தருணங்களில் வைத்தியர்கள் கரோனரி தமனி எனும் ரத்த நாளப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை நீக்க பிரத்யேக சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.
இதனை மருத்துவ மொழியில் பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி என குறிப்பிடுவர். இத்தகைய சத்திர சிகிச்சை மூலம் அடைப்பட்டிருந்த தமனிகளை சீராக்கி, இரத்த ஓட்டத்தை இயல்பாக்குவார்கள்.
மார்பு வலி, மூச்சு திணறல் போன்ற உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய அறிகுறிகளை குறைக்கவும், இதயத்தின் செயல்பாட்டை மீண்டும் மேம்படுத்தவும் இத்தகைய சத்திர சிகிச்சை பலனளிக்கிறது. இருப்பினும் உங்களுடைய இதய தசை பலவீனமாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் கரோனரி தமனியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கடுமையான அடைப்பு ஏற்பட்டிருந்தாலோ உங்களுடைய இதயத்தின் இடது பக்கத்திற்கு ரத்தத்தை வழங்கக்கூடிய தமனி இயல்பான அளவை விட குறுகியிருந்தாலோ இத்தகைய சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்க மாட்டார்கள். இவர்களுக்கு வேறு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சத்திர சிகிச்சை மூலம் அல்லது சத்திர சிகிச்சையற்ற முறையில் உரிய நிவாரணத்தை வழங்குவார்கள்.
வைத்தியர் முத்துக்குமரன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM