கடந்த ஒரு மாத காலமாக மின்சார வசதியின்றி இருளில் மூழ்கியுள்ள விவசாய கிராமம் இந்நிலையிலும் காட்டு யானை அச்சுறுத்தலால் அக்கிராமத்திலிருந்தும் வெளியேற தாம் தயாராகி வருவதாக அங்குள்ள மட்டக்களப்பு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
இதனால் அங்கு வசிக்கும் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றியும், போக்குவரத்துக்குரிய பாதைகள் சேதமடைந்து காணப்படுவதுடன், காட்டு யானை அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தற்போது அப்பகுதியில் பெரும்போக வேளாண்மை அறுவடை மேற்கொண்டு வருவதன் காரணமாக விவசாயிகள் இரவு வேலைகளிலும் தங்களது பணிக்காக சென்று வரும் வேளை வெள்ள அனர்த்தத்தினால் சேதம் அடைந்த மின்சார கம்பங்கள் கடந்த ஒரு மாத காலமாக திருத்தப் பணிகள் மேற்கொண்டு மின்சார வசதி வழமை நிலைக்கு கொண்டுவருவதங்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வரைவில்லை எனவும் அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
இவற்றால் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த ஒரு மாத காலமாக உயிர் அச்சுறுத் துக்களுக்கு மத்தியில் இரவுப் பொதுதுகளை கழிக்க வேண்டி உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
அங்குள்ள மக்கள் விவசாயம், மீன்பிடி, கால்நடைவளர்ப்பு, மேட்டுநிலப் பயிர்செய்கை, போன்றவற்றை தமது வாழ்வாதார கொண்டுள்ள போதிலும் கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடிவெட்டை, கானந்தனை, ஆகிய பகுதி கிராமமக்களே இவ்வாறு மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இதனால் அங்குள்ள மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் அவர்கள் முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்விடயம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகாரிகளும், விரைவில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அப்பகுதி மக்களுக்கு வழங்கும் மின்சாரத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல் தொடர்பில் கேட்டறிவதற்காக மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையுடன் தொலைபேசி மூலம் சனிக்கிழமை (08.02.2025) தொடர்பை ஏற்படுத்தியபோதும் அதற்கு யாரும் பதிலளிக்கவில்லை.
எனினும் மின்சார சபையின் திருகோணமலையில் அமைந்துள்ள காரியாலயத்திற்கு அழைப்பெடுத்தபோது சனிக்கிழமை (08) மட்டக்களப்பு காரியாலயத்தில் யாரும் இருக்கமாட்டார்கள், மின்சார சபையின் மட்டக்களப்பு காரியாலயத்திற்குப் பொறுப்பான பொறியியலாளரின் தனிப்பட்ட தொடர்பு இலக்கம் தமக்குத் தெரியாது எனவும் தொலைபேசிக்குப் பதிலளித்த பெண் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM