இசை வள்ளல் 'டி இமானின் தாள லயத்தில் உருவான ' 2 K லவ் ஸ்டோரி ' படத்தின் இசை வெளியீடு

Published By: Digital Desk 2

08 Feb, 2025 | 04:03 PM
image

புதுமுக நடிகர் ஜெக வீர் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ' 2 K லவ் ஸ்டோரி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த தருணத்தில் தமிழ் திரையுலகத்தின் முன்னணி இயக்குநர்கள் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி இப்படத்தின் இசையை வெளியிட்டனர்.

முத்திரை பதித்த இயக்குநரான சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' 2 K லவ் ஸ்டோரி ' எனும் திரைப்படத்தில் ஜெக வீர் ,மீனாட்சி கோவிந்தராஜன் , பால சரவணன்,  சிங்கம் புலி , ஜெயப்பிரகாஷ்,  ஜி பி முத்து,  இயக்குநரும், நடிகருமான ஆண்டனி பாக்யராஜ் மற்றும் முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வி எஸ் ஆனந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை வள்ளல்' டி இமான் இசையமைத்திருக்கிறார். டிஜிட்டல் யுக காதலையும், காதலர்களை பற்றியும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சிட்டி லைட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்பிரமணியன் தயாரித்திருக்கிறார்.

எதிரில் வரும் 14-ம் திகதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கு பற்றிய 'இசை வள்ளல்' டி. இமான் பேசுகையில், '' தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் இந்த படத்தை பார்வையிட்டு தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் சுசீந்திரனின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் தங்களுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி இந்த படைப்பை பார்வையிட்டதற்காக அவர்களுக்கு முதலில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் சுசீந்திரன் - தனக்கு என்ன வேண்டும் என்பதனை தெளிவாக விவரிக்க கூடிய படைப்பாளி. இவருடன் இணைந்து பணியாற்றுவது என்பது மறக்க இயலாத அனுபவம். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23
news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40
news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46