வீதியோரத்தில் வசிப்பவர்களுக்கும், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் நடுத்தர வர்க்கத்து மனிதர்களுக்கும் வாழ்க்கையின் மிகப்பெரிய இலக்கு என்பது சொந்தமாக காணி வாங்கி அதில் வீடு கட்ட வேண்டும் என்பதுதான். பிறந்ததிலிருந்து எதற்கும் கடன் வாங்காதவர்கள் கூட சொந்தமாக காணி வாங்கி வீடு கட்ட வேண்டும் என நினைத்து அதற்கான செயல் திட்டத்தில் இறங்கி பணியாற்றும் போது கடன் வாங்காமல் இருப்பதில்லை.
கடன் என்பது ஒரு பக்கம் சுமை என்றாலும் ஒரு பக்கம் நெருக்கடியை வழங்கக்கூடிய தன்மை படைத்தது என்றாலும் கடன் என்பது உங்களிடம் இருக்கும் ஆற்றலை கூடுதலாக இயங்க செய்யும் மறைமுகமான திறன் படைத்தவை.
இதன் காரணத்தினாலேயே பலரும் கடன் வாங்கி தங்களிடத்தில் இருக்கும் திறமையை அதிகரித்துக் கொள்வதும் உண்டு. விடயம் அதுவல்ல நீங்கள் சொந்தமாக காணி வாங்கி அதில் வீடு கட்ட தொடங்கும் போது விவரிக்க இயலாத அல்லது இனம் தெரியாத அல்லது எதிர்பாராத வகையில் பல்வேறு தடைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் எழக்கூடும்.
இதனை எதிர்கொள்வதற்கான சூட்சமங்கள் தெரியாததால் பலரும் அவர்களுடைய வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். காணியை விற்பனை செய்ய இயலாத நிலை காணி மீது நீதிமன்றத்தில் வழக்கு வீடு கட்டிக் கொண்டிருக்கும்போது பணிகள் பாதியில் தடைபடுவது என பல்வேறு விரும்ப தகாத நிகழ்வுகள் நடைபெறும். இதுபோன்ற தருணங்களில் சோதிட நிபுணர்களையும் , ஆன்மீக முன்னோர்களையும் அணுகி ஆலோசனை கேட்பது நல்லது என்றாலும், தவறாமல் வாஸ்து நிபுணர்களையும் சந்தித்து ஆலோசனையையும், வழிகாட்டலையும் கேட்க வேண்டும்.
வீடு எழுப்பத் தொடங்கிய தருணத்தில் இருந்த நிலைப்பாடு செல்லச் செல்ல தாமதங்கள் ஏற்பட்டு பணிகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தால் கலங்கி நின்று விட வேண்டாம். அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று அந்த ஆலயத்தின் வளாகத்தில் இருக்கும் யானையைக் கண்டு , ஆசி பெறுங்கள். அத்துடன் யானை விரும்பி சாப்பிடும் உணவுகள் என்ன? என்பதனை அதன் பாகனிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதனை திங்கட்கிழமைகளிலோ அல்லது செவ்வாய்க்கிழமைகளிலோ ஒரு வேளை வாங்கித் தருவதற்கு முயற்சி செய்யுங்கள். அத்துடன் யானையின் சாணத்தை பாகனின் அனுமதி பெற்று வாங்கி வந்து உங்களுடைய கட்டி முடிக்கப்படாத வீட்டின் ஈசானிய மூலையில் வைத்து விடுங்கள் அல்லது அப்பகுதியை பள்ளம் தோண்டி அதில் புதைத்து விடுங்கள். 48 மணி நேரம் அல்லது 48 நாட்களுக்குள் தடைப்பட்டிருந்த பணிகள் மீண்டும் வேகம் எடுப்பதை அனுபவத்தில் கண்டு ஆனந்தம் அடையலாம்.
உடனே எம்மில் சிலர் நாங்கள் வசிக்கும் பகுதியில் இல்லை யானையும் இல்லை, யானைப்பாகனும் இல்லை?என்ன செய்வது? எனக் கேட்பார். வலம்புரி சங்கினை ஆன்மீக பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் இருந்து வாங்கி உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த வலம்புரி சங்கில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு ,ஜாதி பத்திரி ஆகிய மூலிகை பொருட்களை வாங்கி தூளாக்கி, அதில் வைத்து அதனுடன் சிறிதளவு நீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை மாலையில் செய்து நாள் முழுவதும் இந்த நீரை பூஜை அறையில் வைத்து அடுத்த நாள் காலையில் நீராடி இறைவனை மனதில் நினைத்து, 'வீடு தொடர்பான பிரச்சனைகள் நிறைவு பெற்று, முழுமையாக கட்டி முடிக்கப்பட வேண்டும்' என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த நீரை சிறிதளவு அருந்தி விட்டு வீடு முழுவதும் அதனை தெளித்து விட்டு எந்த காணியில் உங்களுடைய வீட்டிற்கான பணிகள் நடைபெறுகிறதோ அங்கும் அந்த புனித நீரை தெளிக்க வேண்டும். 48 நாட்களுக்குள் உங்கள் காணி தொடர்பான பிரச்சனைகள் விலகி, வீடு கட்டும் பணி விரைந்து நடைபெறுவதை அனுபவத்தில் காணலாம். வலம்புரி சங்கில் நீங்கள் விடும் தீர்த்தத்தில் இருந்து எழும் நாத ஒலி உங்களுடைய பிரச்சனைகளை களைவதை உணரலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM