வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள் புனரமைப்பு பணி ஆரம்பம்

08 Feb, 2025 | 03:46 PM
image

வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீள் புனரமைப்பு செய்யும் பணி நேற்று வெள்ளிக்கிழமை (07) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில்  இப்பணிகள் ஆரம்பமானது.

மிகத் தொன்மையான எமது முன்னோர்களின் வழிப்பாட்டுத் தலமான இவ்வாலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள்உருவாக்கம் செய்வதற்கு நீண்ட காலம் முயற்சி எடுக்கப்பட்டது.

இந் நிலையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகள் பாலயோகஸ்தினி சிவயோகநாதன் இவ்வாலயத்தினை பழைய நிலைக்கு மீள் புனரமைப்பு  செய்வதற்குரிய நிதியுதவியினை வழங்கியுள்ளார்.

வெள்ளிக்கிழமை  இடம் பெற்ற இவ் வாலயத்தின் புனரமைக்கும் பணிகளில் மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் மரபுரிமை மையத்தின் உபதலைவர் சத்திர சிகிச்சைப் பேராசிரியர் ரவிராஜ், இவ்வாலயத்தினை மீள் புனரமைப்பு  செய்வதற்குரிய நிதி உதவியினை வழங்கிய பாலயோகஸ்தினி சிவயோகநாதன் தந்தை சிவயோகநாதன், யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் செயலாளர் ரமேஸ், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை சிரேஸ் விரிவுரையாளர் ஜெயதீஸ்வரன் இவ்வாலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் முக்கிய பணியில் இருக்கும் கபிலன், செல்வி துஸ்யந்தி, மணிமாறன் மற்றும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் பத்திராசிரியர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் ;...

2025-03-21 11:57:00
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-21 12:22:02
news-image

உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம்...

2025-03-21 12:24:26
news-image

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு...

2025-03-21 11:53:19
news-image

இலங்கைக்கு தீயணைப்பு வாகனங்களை வழங்க ஜப்பான்...

2025-03-21 12:22:41
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு -  6...

2025-03-21 12:08:17
news-image

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் !

2025-03-21 11:51:15
news-image

வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து :...

2025-03-21 11:31:24
news-image

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் ஆஜராகாது இருந்தால்...

2025-03-21 11:13:13
news-image

மாத்தளையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 95...

2025-03-21 11:01:18
news-image

தலவாக்கலை மிடில்டன் பஸார் மதுபானசாலை அருகில்...

2025-03-21 10:47:00
news-image

முக்கிய உள்ளூராட்சிமன்றங்களில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு

2025-03-21 10:49:14