இராமகிருஷ்ண மிஷனின் மலையகத்துக்கான முதலாவது கிளை கொட்டகலையில் திங்கட்கிழமை(10) திறக்கப்படவுள்ளது.
இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் அத்தோடு பகவான் இராமகிருஷ்ண ஆலயமும், சிவானந்த நலன்புரி நிலையமும் திறந்து வைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் வரவேற்புரையை நிகழ்த்தவுள்ளதோடு பிரதம அதிதியாக உலகளாவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடங்களின் துணைத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்த ஜி மகராஜ் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும், காசி இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சர்வரூபானந்த ஜி மகாராஜ், மதுரை இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி நித்யதீபானந்த ஜீ மகராஜ் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளதோடு கும்பாபிஷேக கிரியைகளை சிவாகம கலாநிதி சிவஸ்ரீ.கு.வை.க.வைத்தீஸ்வரக் குருக்கள் முன்னெடுக்கவுள்ளார்.
இதேவேளை, கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி இராஜேஸ்வரானந்தா ஜீ மகராஜ் தலைமையில் நாளை (09) கொட்டகலை பிரதேசத்தில் மாபெரும் ஊர்வலம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM