சாம்பியன் கிண்ணத்தொடரில் இலங்கை அணியின்  தற்காலிக தலைவராக செயற்பட்ட உப்புல் தரங்க, தொடரில் அடுத்து வரும் இரு போட்டிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். 

இலங்கை அணியின் தற்காலிக தலைவரான தரங்க, நேற்று தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில், பந்துவீசுவதற்காக அதிக நேரத்தை எடுத்துக்கொண்டமை தொடர்பிலேயே, அவருக்கு இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நேற்றையதினம் இலங்கை அணி 50 ஓவர்கள் பந்து வீசுவதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விடவும் அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டது.  

இந்நிலையில் தற்காலிக தலைவராக செயற்பட்ட உபுல் தரங்க அடுத்து இடம்பெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் விளையாடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.