பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர மற்றும் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித்ரோகன ஆகியோர் உட்பட 12 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 154 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது.
குறித்த இடமாற்றங்களுக்கு அமைய, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தங்கள் வழமையான பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் விபரங்கள் பின்வருமாறு ;
வடமேல் மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்த டபிள்யூ.கே.ஜயலத் தென்மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய கே.ஏ.ரோஹன வடமேல் மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரப்படையின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய பிரதிப்பொலிஸ் மா அதிபர் டபிள்யு.எஸ்.ஈ.ஜயசுந்தர கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நாட்டில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுக்கும் வகையில் சிறப்பாக செயற்பட்ட உயர் அதிகாரியாவார்.
மேலும் அவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியாக இருந்த 4 வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் அந்தப்பிரிவினால் 357 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் 155 கிலோ ஐஸ்போதைப்பொருள் 6463 கிலோ கேரள கஞ்சா மற்றும் 2866 கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய பிரதிப்பொலிஸ் மா அதிபர் டி.ஜி.எஸ்.டி சில்வா பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதியாக பணியாற்றவுள்ளார்.
தென்மாகாணத்துக்கு பொறுப்பாக பிரதிப்பொலிஸ் மா அதிபராக பணியாற்றி வந்த பிரதிப்பொலிஸ் மா அதிபர் எஸ்.டபிள்யு.எம். சேனாரத்ன ஊவா மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தென்மாகாணத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களை தடுக்க சிறப்பாக செயற்ப்பட்ட அதிகாரியாவார்.
ஊவா மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய பிரதிப்பொலிஸ் மா அதிபர் யு.ஜி.ஏ.கே.பீ. கருணாரத்ன விசேட பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபராக கடமையாற்றவுள்ளார்.
இதனிடையே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிக்கொண்டிருக்கும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் எஸ்.டி.விஜேசேகர அதற்கு மேலதிகமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மாஅதிபராகவும் செயற்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM