நாம் அனைவரும் உழைப்பது பணத்திற்காகத்தான். பணம் கிடைத்தால் மட்டும்தான் அதாவது ரூபாய் கிடைத்தால் மட்டும்தான் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்துவதற்கு வழிவகை செய்ய இயலும். 'அருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு எவ்வுலகமும் இல்லை ' என செல்வத்தின் முக்கியத்துவத்தை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இறை வழிபாட்டின் முதன்மையான இலக்கு என்பது செல்வ வளத்திற்காகத்தான் . செல்வம் எம்மிடத்தில் இருந்தால் அக மகிழ்ச்சியும் , ஆரோக்கியமும் அதிகமாகும். இதனால்தான் எம்மில் பெரும்பாலோர் செல்வ வளத்தை அருளும் மகாலட்சுமி வழிபாட்டை நாளாந்தம் தவறாமல் மேற்கொள்கிறார்கள். இந்தத் தருணத்தில் மகாலட்சுமியின் வழிபாட்டை சூட்சமமான முறையில் மேற்கொள்ளும் போது அவரின் பரிபூரண அருள் கிடைப்பதுடன் நிரந்தரமாக எம்முடைய இல்லங்களில் தங்கி அருள் புரிவார் என்பது முன்னோர்களின் வாக்கு.
இதற்கு தேவையான பொருட்கள் : ஆறு மொச்சை பயிர், ஆறு ஒரு ரூபாய் நாணயம் , ஆறு டைமண்ட் கல்கண்டு, பசு நெய் , காமாட்சி விளக்கு , தாமரைத் தண்டு திரி.
வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரை என குறிப்பிடப்படும் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலான தருணத்தில் உங்களுடைய பூஜை அறையில், பூஜை அறையை சுத்தம் செய்து காமாட்சி விளக்கிற்கு சந்தனம் குங்குமத்தால் பொட்டிட்டு, பசு நெய்யை ஊற்றி தாமரை தண்டு திரியை வைத்து விளக்கேற்ற வேண்டும். இந்த விளக்கை ஏற்றுவதற்கு முன் விளக்கின் கீழ்ப்பகுதியில் ஒரு தட்டை வைத்து அந்த தட்டிற்குள் ஆறு மொச்சை பயிறு, ஆறு டைமண்ட் கல்கண்டு, ஆறு ஒரு ரூபாய் நாணயங்கள் இந்த மூன்றையும் வைத்துவிட்டு அதன் மேல் விளக்கை வைக்க வேண்டும். இதன்பிறகு குன்றா செல்வம் குன்று போல் வீட்டில் பொங்க வேண்டும் என மனதுள் மகாலட்சுமியை நினைத்து பிரார்த்திக்க வேண்டும். இப்படி சூட்சமமான முறையில் விளக்கேற்றி மகாலட்சுமியை ஆறு வாரங்கள் வரை வெள்ளிக்கிழமை தோறும் காலையில் விளக்கேற்றி வணங்கி வந்தால் உங்களுடைய தன வரவு அதிகரிப்பதை அனுபவத்தில் காணலாம்.
இதுபோன்ற விளக்கினை ஏற்றி வழிபடும்போது வாரா கடன் வசூலாவதையும், எப்போதோ கொடுத்துவிட்டு வராது என நினைத்திருந்த தொகையும் , நீதிமன்றத்தின் மூலம் நிலுவையில் இருந்த தொகையும், தாமதமாக கிடைக்கும் என்று கருதிய தொகையும் உடனடியாக கிடைப்பதையும் அனுபவத்தில் கண்டு உணர்ந்து மகிழலாம். சிலருக்கு புதிய வாய்ப்புகள் மூலமாகவும், சிலருக்கு உப தொழில்கள் மூலமாகவும் கூடுதல் வருவாய் கிடைப்பதையும் அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM