இன்றைய தகவல் தொழில்நுட்ப விடயங்கள் இணையத்தில் பரவலாக கிடைக்க தொடங்கியுள்ளன. இதன் காரணமாக படித்தவர்கள் பலரும் இணையதளத்தில் வெளியாகும் மருத்துவ தகவல்களை தெரிந்து கொண்டு அதில் குறிப்பிடப்படும் சில பரிசோதனைகளை வைத்தியரின் அறிவுரை அல்லது பரிந்துரை இல்லாமல் சுயமாக மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை வல்லுநர்கள் மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வைத்தியர்களின் பரிந்துரை இல்லாமல் எந்த பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்திருக்கிறார்கள். இருப்பினும் எம்மில் சிலர் எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமான திசுக்களை பாதிக்கும் ஒட்டோ இம்யூன் டிசிஸ் எனும் பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளும் ஏ என் ஏ எனும் பிரத்யேக குருதி பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். இது தொடர்பாக பலரும் தெரிந்து கொள்வதற்கான விளக்கத்தை வைத்தியர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.
ரூமட்டாய்ட் ஓர்த்தரடீஸ், ஸ்க்லெரோடெர்மா எனும் பிரத்யேக தோல் பாதிப்பு போன்ற பாதிப்புகளுக்கு எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலமே காரணமாகிறது. இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வைத்தியர்கள் ஏ என் ஏ எனும் பிரத்யேக குருதி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்வார்கள். மேலும் மூட்டு வலி, சோர்வு, காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கும் , அறிகுறிகளுக்கும் மருத்துவ ரீதியிலான காரணத்தை கண்டறிவதற்காகவும் வைத்தியர்கள் மேலே குறிப்பிடப்பட்ட ஏ என் ஏ எனும் குருதி பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள்.
இத்தகைய ஏ என் ஏ எனும் பரிசோதனை அதாவது ஆன்டி நியூக்ளியர் ஆன்டிபாடிஸ் ( Antinuclear Antibodies) - உங்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் பொதுவாக தொற்று பாதிப்பை எதிர்த்து போராடுகிறது. இவை தொற்று பாதிப்பை எதிர்த்து போராடுவதற்கு பதிலாக உங்கள் உடலின் உள்ள ஆரோக்கியமான திசுக்களை தவறுதலாக தாக்குகின்றன. இத்தகைய அமைப்பு உங்களுடைய குருதியில் இருக்கிறதா? இல்லையா? என்பதனை கண்டறிவதற்காக தான் வைத்தியர்கள் ஏ என் ஏ சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்கள்.
மூட்டு வலி, சோர்வு, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இதற்கு தொடர்பு உள்ளதால் இத்தகைய அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு மேலே விவரிக்கப்பட்ட குருதி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள்.
உங்களுடைய குருதி பரிசோதனையில் ஏ என் ஏ என்பது இருக்கிறது என உறுதியாக தெரிய வந்தால் அதற்காக அச்சப்பட வேண்டாம். பதற்றமடைய வேண்டாம். ஏனெனில் எந்த நோயும் இல்லாதவர்களுக்கும், எந்த அறிகுறியும் இல்லாதவர்களுக்கும், குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்ட பெண்மணிகளுக்கு மேற்கொள்ளப்படும் ஏ என் ஏ பரிசோதனையில் அவை இருப்பதாகவே கண்டறியப்படுகிறது. எனவே உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் உங்களுடைய ஆரோக்கியமான திசுக்களை பாதிக்கும் தன்மை கொண்டதா? இல்லையா? என்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே இத்தகைய குருதி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பதையும், இதற்கென பிரத்யேகமாக சிகிச்சை எதுவும் இல்லை என்பதையும் மக்கள் தெளிவு கொள்ள வேண்டும்.
வைத்தியர் விக்னேஷ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM