சின்னத்திரை தொடர்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பை போன்று தற்போது டிஜிட்டல் தளங்களில் ஒளிபரப்பாகும் இணையத் தொடருக்கும் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. குறிப்பாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் அதன் அசல் இணைய தொடருக்கும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த தருணத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 21-ஆம் திகதி முதல் 'ஓபீஸ் ' எனும் இணைய தொடர் ஒளிபரப்பாகிறது. இது தொடர்பாக பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கபீஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஓபீஸ் ' எனும் இணைய தொடரில் குரு லக்ஷ்மண், சபரீஷ், ஸ்மேகா கீர்த்தி வேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி , சரித்திரன், சிவா அரவிந்த் , 'பிராங்க் ஸ்டார் ' ராகுல் , டி எஸ் ஆர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை இணைய தொடராக உருவாகி இருக்கும் இதனை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எனும் டிஜிட்டல் தள நிறுவனத்திற்காக தயாரிப்பாளர் ஜெகன் நாத் தயாரித்திருக்கிறார்.
இந்த இணைய தொடரின் அறிமுக பாடல் இணையத்தில் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த இணைய தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் அசல் நகைச்சுவை தமிழ் இணைய தொடராக ஒளிபரப்பாகிறது.
இந்த இணையத் தொடரின் அறிமுக காணொளியில் கிராமம் ஒன்றில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்காக பெண் ஒருவர் அரசாங்க அலுவலகத்திற்கு வருகை தருவதும் , இவருடைய கோரிக்கை தொடர்பாக அரசாங்க அதிகாரி கேட்கும் விபரங்களுக்கு இவர் பதில் தெரிவிக்கும் விதமும் கொமடி கலாட்டாவாக இருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM