'ஜெய் பீம் ' படத்தில் தனித்துவமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகை லிஜோமோல் ஜோஸ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' ஜென்டில்வுமன் ' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி பிரத்யேக புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஜென்டில்வுமன் ' எனும் திரைப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், லொஸ்லியா, ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சா. காத்தவராயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இரண்டு பெண்களைப் பற்றிய உணர்வு பூர்வமான படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே ஹெச் பிக்சர்ஸ் மற்றும் ஒன் ட்ராப் ஓஸன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கோமளா ஹரி, ஹரி பாஸ்கரன், பி. என். நரேந்திர குமார், லியோ லோகன் நேதாஜி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்த இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெண்களைப் பற்றி சமூகத்தில் உள்ள கற்பிதங்களை கேள்வி கேட்கும் படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இரண்டு பெண்களின் வாழ்வியலை முதன்மையாக கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பெண்களும் சமூகத்தில் பெண்கள் மற்றும் பெண்மணிகள் மீது எழுப்பப்படும் உடல் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது போலும் உடலியல் ரீதியான துன்பங்களை பெண்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வையும் இந்த படைப்பு உண்டாக்கும் '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM