(பா.ருத்ரகுமார்)

சப்ரகமுவ மாகாணத்தில் இயற்கை அனர்த்தம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில்  14 பாடசாலைகளை தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் நாளை திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் கடுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் அகதிகளாக வாழ்ந்துவரும் 14 பாடசாலைகளில் நாளை மறுநாள் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.