(நெவில் அன்தனி)
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் வோர்ன் - முரளிதரன் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அமோக வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, இரண்டாவது போட்டியிலும் பிடியை தன்பக்கம் திருப்பிக்கொண்டுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் பதில் அனித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் குவித்த தொடர்ச்சியான இரண்டாவது சதம், அலெக்ஸ் கேரி குவித்த சதம் என்பன அவுஸ்திரேலியாவை பலமான நிலையை நோக்கி நகர வைத்துள்ளது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக் 229 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, 257 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.
தனது துடுப்பாட்டத்தை 59 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த குசல் மெண்டிஸ், 139 பந்துகளை எதிர்கொண்டு 85 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். அவர் மொத்தமாக 3 மணித்தியாலங்கள் 34 நிமிடங்கள் களத்தில் இருந்தார்.
அவரது துடுப்பாட்டமே இலங்கை அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டது.
லஹிரு குமாரவுடன் கடைசி விக்கெட்டில் 33 ஓட்டங்களை குசல் மெண்டிஸ் பகிர்ந்தார்.
44 நிமிடங்கள் தாக்குப் பிடித்த லஹிரு குமார 20 பந்துகளை எதிர்கொண்டு 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தார்.
இலங்கையின் முதல் இன்னிங்ஸில் முதலாம் நாளன்று தினேஷ் சந்திமால் 74 ஓட்டங்களையும் திமுத் கருணாரட்ன 36 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெத்யூ குனேமான் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நேதன் லயன் 96 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இலங்கை முதல் இன்னிங்ஸில் பெற்ற 257 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 330 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையை நோக்கி நகர்ந்துள்ளது.
முதலாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதமிருக்க இலங்கையை விட 73 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.
அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
ட்ரவிஸ் ஹெட் (21), மானுஸ் லபுஷேன் (4) ஆகிய இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
முதல் போட்டியில் இரட்டைச் சதம் குவித்து ஹீரோவான உஸ்மான் கவாஜா இந்தப் போட்டியில் 36 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஆனால், 3ஆவது விக்கெட்டில் பதில் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்துடன் கவாஜா 54 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் நிதானத்துட னும் சிறந்த நுட்பத்திறனுடனும் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 239 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை நல்ல நிலையில் இட்டனர்.
நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிவரும் ஸ்டீவன் ஸ்மித் 239 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 1 சிக்ஸ் உட்பட 120 ஓட்டங்களுடனும் அலெக்ஸ் கேரி 156 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 139 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
பந்துவீச்சில் நிஷான் பீரிஸ் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM