(நெவில் அன்தனி)
யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) ஆரம்பமான 14ஆவது இந்துக்களின் சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்து கல்லூரி அணி பலமான நிலையில் இருக்கிறது.
போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் யாழ். இந்து கல்லூரி அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கே. பரஷித் 39 ஓட்டங்களையும் வி. விதுசன் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் எஸ். சுபர்ணன் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதம் இருக்க, கொழும்பு இந்து கல்லூரி அணியை விட 152 ஓட்டங்களால் யாழ். இந்து கல்லூரி அணி முன்னிலையில் இருக்கிறது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த யாழ். இந்து அணி, முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் அறுவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று தங்களது அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.
அவர்களில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மத்திய வரிசை வீரர் வி. விதுஷன் 9 பவுண்டறிகளுடன் 49 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரைவிட அணித் தலைவர் கே. பரஷித் (20), எஸ். சுபர்ணன் (16), ரி. பிரீத்திகன் (14), ரீ. பிரீமிகன் (12), ஜே. பவானன் (12), ஐ. ஸ்ரீவஸ்தன் (11) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
கொழும்பு இந்து பந்துவீச்சில் விஸ்வநாதன் யுவராஜ் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பத்மநாதன் ஸ்ரீ நிதுசன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராமநாதன் தேஸ்கர் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்து (பம்பலப்பிட்டி) சகல விக்கெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை மட்டும் பெற்றது.
துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய தவகுமார் சந்தோஷ் 8 பவுண்டறிகளுடன் 42 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட சுரேஷ் குமார் மிதுஷிகன் (13) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.
யாழ். இந்து பந்துவீச்சில் கே. நித்தீஸ் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வி. விதுசன் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் எஸ். சுபரணன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.
இந்துக்களின் சமருக்கு ஜனசக்தி குழுமம் 3ஆவது வருடமாக அனுசரணை வழங்குகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM