குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா - 2025

Published By: Digital Desk 7

07 Feb, 2025 | 07:48 PM
image

அபிலாஷனி லெட்சுமன்

குளோபல் ஆர்ட்ஸ் நிறுவனமானது அமெரிக்கா முத்தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் கலாநிதி ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன்  இணைந்து “குளோபல் ஆர்ட்ஸ்  சர்வதேச நடன திருவிழா -2025” என்ற தொனிப்பொருளிலான நடன நிகழ்ச்சியை எதிர்வரும் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ணன் மிஷன் மண்டபத்தில் நடத்தவுள்ளது.

இதனை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை (07) கொழும்பு வெள்ளவத்தை குளோபல் டவரில்  ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் குளோபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் செல்லத்துரை பிரதீஸ் குமார்,  ஸ்ரீதேவி பிரசாத் ,  ஜெயாஞ்சலி இன்டர்நெசனல் யூகே நிறுவனத்தின் இயக்குநர் தயாபர மூர்த்தி நிர்மலன் மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தந்த பல்வேறு நாட்டிய நிறுவனங்களின் நடன ஆசிரியர்களும் கலந்துக் கொண்டனர்.

மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் குளோபல் ஆர்ட்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில்  நடன விழாக்களை நடத்துவது குறிப்பிடத்தக்கது.  குளோபல் ஆர்ட்ஸ் நிறுவனமானது நாட்டியம் மட்டுமன்றி ஏனைய கலைகளுக்கும் முன்னுரிமை வழங்கும் பட்டப்படிப்பினை வழங்கும் நிறுவனமாகும். 

இந்தியாவிலிருந்து வருகை தந்த நடன ஆசிரியர்களும் இலங்கையில் உள்ள நடன ஆசிரியர்களும் இணைந்து நாட்டியத்துறையில் பாடத்திட்டத்தை நிறைவு செய்து பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவினை நடத்துகின்றது.

இதன் போது உரையாற்றிய குளோபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் செல்லத்துரை பிரதீஸ் குமார், 

குளோபல் ஆர்ட்ஸ் நிறுவனமானது அமெரிக்கா முத்தமிழ் பல்கலைக்கழகம் , கலாநிதி ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம் மற்றும் ஜெயாஞ்சலி இன்டர்நெசனல் யூகே நிறுவனம் ஆகியவற்றுடன்  இணைந்து இலங்கையில் தமது பணிகளை மேற்கொள்வதற்கான ஆரம்ப நிகழ்வு கல்முனையில்  ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி.சௌமியா தலைமையில் இடம்பெற்றதாக தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நடனக் கலைஞர்களும் இலங்கையில் உள்ள நடனக்கலைஞர்களும் இணைந்து “குளோபல் ஆர்ட்ஸ்  சர்வதேச நடனத் திருவிழா -2025” என்ற தொனிப்பொருளிலான நடன நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதோடு, நடன ஆசிரியர்களும் நடன நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பங்குக்கொள்ள 200க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து 50ற்கு மேற்பட்ட நடன கலைஞர்களும் 10 நடன ஆசிரியர்களும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

நாட்டியத்துறையில் பாடத்திட்டத்தை நிறைவு செய்து பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளதோடு மதியம் 2 மணியளவில் நடன நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

குளோபல் ஆர்ட்ஸ்  சர்வதேச நடனத் திருவிழாவில் பங்குகொள்ளவதற்காக  இலங்கையில் காணப்படும் நடனக் கலைஞர்களில் ஒரு மாகாணத்துக்கு ஒருவர் அல்லது இருவர் என்ற ரீதியில் 10 குழுக்கள் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு இம்முறை வழங்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.

இதன் போது இந்தியாவிலிருந்து வருகை தந்த நடன ஆசிரியர்கள் தெரிவிக்கையில்,  

அழகிய உணர்வு மிக்க நடன நிகழ்வை நடாத்துவதற்கு நாட்டியக்கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் சிறந்த திட்டமாக தெரிவித்தனர்.

இலங்கையில் கலைகளுக்கென சிறப்பு உண்டு. அந்தவகையில் இந்நிகழ்வில் பங்குகொள்ள எமது மாணவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.

தனிப்பட்ட முறையில் கலைகளை கற்க விரும்பும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தோற்றும் வாய்ப்பினை குளோபல் ஆர்ட்ஸ் நிறுவனம்  வழங்குவது  சிறப்புக்குரியது என தெரிவித்தனர்.

கடந்த 03 வருடங்களாக குளோபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தினால் நடனம் மட்டுமன்றி ஏனைய கலைகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பளிக்கிறது. எனவே இத்தகைய வாய்பினை வழங்குவதன் மூலம் சக கலைஞர்களும் நன்மைகள் பல பெறுவதாக தெரிவித்தனர்.

சர்வதேச அளவில் தமது திறமைகளை வெளிக்காட்டுவதை குளோபல் ஆர்ட்ஸ்  நிறுவனம் ஒரு சிறந்த பணியாக மேற்கொள்வதாக மேலும் தெரிவித்தமைக் குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு: எஸ்.எம்.சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21
news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36