2025 யாழ் ரத்னா விருதிற்கான விண்ணப்பம் கோரல்

Published By: Digital Desk 2

08 Feb, 2025 | 11:43 AM
image

( எம்.நியூட்டன்)

2025 யாழ் ரத்னா விருதிற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதுடன்  தகுதியானவர்கள்  ஆவணங்களை விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளரும் கலாசாரப்பேரவையின் தலைவருமான எஸ்.சுதர்சன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பிரதேச கலாசாரப்பேரவையினால் கலைத்துறைக்கு ஆற்றிய சேவைக்கு வழங்கப்படுகின்ற விருதாகிய யாழ் ரத்னா விருதுக்கு கவிதை, சிறுகதை, நாவல், நடனம், ஓவியம், சிற்பம், நாடகம், குறும்படத்துறை, இசைநாடகம், இசை (வாய்ப்பாட்டிசை, பண்ணிசை, இசையமைப்பு ) வாத்தியக்கலை (தவில், நாதஸ்வரம், புல்லாங்குழல், மிருதங்கம்,வயலின், வீணை, ஓர்கள், ஆர்மோனியம், போன்றன) கூத்து (வடமோடி, தென்மோடி, சிந்துநடை) கிராமியக்கலைகள் (கரகம், காவடி கும்மி, கோலாட்டம். வசந்தன் கூத்து, வில்லுப்பாட்டு மொம்மலாட்டம், ஒயிலாட்டம், மகுடி போன்ற தொடர்புடைய கலைகள்) இசைக்கலை (வாய்ப்பாட்டு, பண்ணிசை, இசையமைப்பு) ஒப்பனைக்கலை (நாடகங்கள்,சுத்துக்கள், நடனக்கலைத்துறைகளுக்கானவை) வாத்தியங்கள் உருவாக்கம் ஆகிய துறைகளில் யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் கலைப்பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தர வதிவிடத்தினைக் கொண்ட 60வயது பூர்த்தியடைந்தவர்களும் இதுவரை இவ்விருதினை பெற்றுக்கொள்ளாதவர்களும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப்படிவங்களை யாழ்ப்பாண பிரதேச செயலக கலாசாரப்பிரிவில் பெற்று பூரணப்படுத்திய விண்ணப்பத்துடன் உரிய கலைத்துறையினை சான்றுப்படுத்தும் ஆவணப்பிரதிகளுடன்  எதிர்வரும் 20ஆம்  திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை...

2025-03-23 12:50:49
news-image

இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என தெரிவித்துக்கொண்டு...

2025-03-23 12:38:36