மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான புகையிரத நிலைய பிரதான வீதி பல வருடங்களாக உரிய முறையில் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
முன்னதாக அவ்வீதியை புனரமைப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் வீதி அபிவிருத்திப் பணிகள் இடம்பெறாத நிலையில் ஒதுக்கப்பட்ட நிதியும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புகையிரத பயணங்களுக்காக செல்லும் பொதுமக்கள் உட்பட சாந்திபுரம், சௌத்பார் முதலான பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த வீதியை ஒழுங்கான முறையில் பயன்படுத்த முடியாமல் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் வீதி சீரமைப்புப் பணிகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறிப்பாக, வீதிகளில் பள்ளங்களை நிரப்பும் பணிகள் கூட நேர்த்தியாக இடம்பெறவில்லை எனவும் அந்த பணிகளும் நீண்டகால பாவனைக்கு உகந்ததாக அமையாமல் வீதிகள் சேதமடைந்துள்ளதாகவும் சாந்திபுரம் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையானது பயன்படுத்த முடியாத வீதியை சீராக்கல் என்ற பெயரில், அரசாங்க பணத்தை வீணாக்கி வருகிறது. எனவே, அரசு ஒதுக்கும் நிதியை வீணாக்காமல் வீதியை முழுமையாக புனரமைத்துத் தருமாறு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM