‘மினி உலக கிண்ணம்’ என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது.

இதில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக்கில் பாகிஸ்தானுடன் இன்று பர்மிங்காமில் மோதுகிறது. 

இந்த சாம்பியன்ஸ் கிண்ணத்தில் எதிர்பார்ப்புக்குரிய, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு ஆட்டமாக இது அமைந்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி துடுப்பாட்டம்; மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக திகழ்கிறது. இந்த ஆட்டத்தை பொறுத்தவரை இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தும் என்று பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கணித்து இருக்கிறார்கள். 

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் களத்தடுப்பை தேர்வு செய்து உள்ளது. 

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி சற்றுமுன்னர் வரை 4 ஓவர்கள் 9 ஓட்டங்களை பெற்றுள்ளது.