ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர், அக்சார் ஆகியோரின் அரைச் சதங்கள் இந்தியாவுக்கு கைகொடுத்தன : இங்கிலாந்தை 4 விக்கெட்களால் வென்றது இந்தியா

07 Feb, 2025 | 05:05 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (06) இரவு நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் இந்தியா வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.

இந்தியாவின் இடதுகை சுழல்பந்துவீச்சாளர்களான ரவிந்த்ர ஜடேஜாவும் அக்சார் பட்டேலும் இங்கிலாந்து அணியினருக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர்.

ரவிந்த்ர ஜடேஜா பந்துவீச்சில் அசத்த அக்சார் பட்டேல் துடுப்பாட்டத்தில் அரைச் சதம் குவித்து பிரகாசித்தார்.

அத்துடன் ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 47.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது.

பில் சோல்ட் (43), பென் டக்கெட் (32) ஆகிய இருவரும் 53 பந்துகளில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்கள் வீழ்ந்ததால் இங்கிலாந்து தடுமாற்றம் அடைந்தது. (111 - 4 விக்.)

எவ்வாறாயினும் ஜொஸ் பட்லர் (52), ஜேக்கப் பெத்தல் (51) ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்துடன் 5ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து  அணியை மீண்டும் பலப்படுத்தினர்.

இதன் பலனாக 33ஆவது ஓவரில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்து, கடைசி 6 விக்கெட்களை 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.

பந்துவிச்சில் ரவிந்த்ர ஜடேஜா 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹர்ஷித் ரானா 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

249 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 38.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

யஷஸ்வி ஜய்ஸ்வால் (15), அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (2) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (19 - 2 விக்.)

இந் நிலையில்  ஷுப்மான்   கில் பொறுமையாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 94 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டனர்.

ஷ்ரோயஸ் ஐயர் 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ஷுப்மான் கில், அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 108 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க இந்தியாவுக்கு உதவினர்.

அக்சார் பட்டேல் 52 ஓட்டங்களையும் ஷுப்மான் கில் 87 ஓட்டங்களையும் பெற்றனர். கே.எல். ராகுல் 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

ஹார்திக் பாண்டியா (9 ஆ.இ.), ரவிந்த்ர ஜடேஜா (12 ஆ.இ.) ஆகிய இருவரும் இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பந்துவிச்சில் சக்கிப் மஹ்மூத் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஷுப்மான் கில்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00