ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதை விரும்புவதில்லை - ஹேஷா விதானகே

07 Feb, 2025 | 08:22 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஒரு சில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் தமிழ் மக்களின்  பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை  விரும்புவதில்லை. பிரச்சினைகளை வளர்த்தெடுக்கவே பார்க்கிறார்கள். இதனால் தான் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. 

பெருந்தோட்ட மக்களை லயன் அறையில் இருந்து வெளிக்கொண்டு வந்து அவர்களை முழுமையான சுதந்திரத்துடன் வாழ வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. 

அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07)  நடைபெற்ற அமர்வின் போது  தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்திற்குச் சுவீகரித்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணையை  முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கிய வகிக்கும் பெருந்தோட்டங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் தோட்ட மக்கள் பயன்படுத்தும் பாதைகள் குறித்த தோட்டங்களுக்கு சொந்தமானதாக காணப்படுகிறது. 

இதனால் அந்த பாதைகள் புனரமைக்கப்படாமல் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆகவே பெருந்தோட்ட  பகுதிகளில் வாழும் மக்களின் நலனை கருத்திற் கொண்டு, இந்த வீதிகளை உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகளின் பொறுப்பில் எடுத்து புனரமைக்குமாறு தனிநபர் பிரேரணையை முன்வைக்கிறேன்.

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் இரத்தினபுரி மாவட்டத்தை அண்மித்த பகுதியில் உள்ள பெருந்தோட்ட பகுதிகளின் நிலைவரங்களை ஆராய்ந்தே இந்த யோசனையை முன்வைத்துள்ளேன். 

ஏனைய பகுதிகளில் உள்ள பெருந்தோட்டங்களிலும் இவ்வாறான நிலையே காணப்படுகிறது. தமிழ் மக்கள்  செறிந்து வாழும் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வீதிகள் தோட்ட கம்பனிகளுக்கு சொந்தமானது. ஒருசில கம்பனிகள் அந்த வீதிகளை கூட அம்மக்கள் பயன்படுத்துவதற்கு இடமளிப்பதில்லை.

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்ட நிறுவனங்கள் அந்த தோட்டக் காணிகள் அவர்களுக்கு உறுதி பத்திரத்தில் எழுதி வழங்கப்பட்டதை போன்று செயற்படுகிறார்கள்.

நாட்டின் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ் மக்களின் நலன் சார்ந்து தோட்ட கம்பனிகள் செயற்படுவதில்லை.அரச நிறுவனங்களும் இதில் தலையிடுவதில்லை.

இந்த வீதிகளை பரிபாலனம் செய்வதற்கு எவரும் இல்லாத காரணத்தால் அவை புனரமைக்கப்படுவதில்லை. இரத்தினபுரி, ரக்வானை, உட்பட நாட்டில் பெரும்பாலான  தோட்ட பகுதிகளில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். 

அவர்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் சகல தோட்ட கம்பனிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். 

முறைமையில் இனி மாற்றம் ஏற்பட வேண்டும்.புதிதாக சட்டங்களை இயற்றி தோட்ட பகுதிகளில் உள்ள வீதிகளை உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொறுப்பாக்க வேண்டும்.

தமிழ் மக்கள் படும் துயரத்தை நாங்கள் அறிவோம்.பெருந்தோட்ட மக்கள் விவகாரத்தில் நுவரெலியா மாவட்டம் குறித்து மாத்திரம் விசேட கவனம் செலுத்தப்படுகிறது. 

ஆனால் இரத்தினபுரி, காலி, களுத்துறை உட்பட ஏனைய மாவட்டங்களில் வாழும் பெருந்தோட்ட தமிழ் மக்களின் நலன் கருது முறையான நடவடிக்கைகள் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெரும்பாலான பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் உள்ளார்கள்.இவர்களின் குரல் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அவசியம். 

ஆனால் அமைச்சுக்கள் ஊடாக வளங்களை பகிர்ந்தளிப்பதில் பாரிய பற்றாக்குறை காணப்படுகிறது. பல ஆண்டுகளை கடந்த பின்னரும் தமிழ் மக்களை லயன் அறை வாழ்க்கையில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கு எந்த அரசாங்கத்தாலும் முடியவில்லை. அதற்கான முயற்சிகளையும் எந்த அரசாங்கமும் மேற்கொள்ளவில்லை.

புதிய அரசாங்கத்தில் மலையக பெண் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.பெருந்தோட்ட மக்களுக்கு தற்காலிக தீர்வு வழங்காமல், நிரந்தர தீர்வு வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்காலத்திலும் அரசியலுக்கு பயன்படுத்துவதை இனியேனும் நிறுத்த வேண்டும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அரசியல் பொம்மைகளாக்கி அதனூடாக ஆட்சியை கைப்பற்றும் செயற்பாடுகள் மாத்திரமே இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

தமிழ் மக்களின் ஆதரவு இருந்தால் வெற்றிப் பெற முடியும் என்று குறிப்பிட்டுக் கொண்டு அவர்களுக்கு பிரத்தியேக கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அமைச்சுக்களும் ஸ்தாபிக்கப்பட்டன. ஆனால் உறுதியான  தீர்வு கிடைக்கவில்லை.

ஒருசில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் தமிழ் மக்களின்  பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை  விரும்புவதில்லை.பிரச்சினைகளை வளர்த்தெடுக்கவே பார்க்கிறார்கள். 

இதனால் தான் நிரந்தர தீர்வு எடுக்கவில்லை.இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மாணவர்களுக்கு உயர்தர கல்வி தரம் போதுமானதாக இல்லை இதனையிட்டு அனைவரும் வெட்கப்பட வேண்டும். 

பெருந்தோட்ட மக்களை லயன் அறையில் இருந்து வெளிக்கொண்டு வந்து அவர்களை முழுமையான சுதந்திரத்துடன் வாழ வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25