சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக்கோரி மூதூர் - இளக்கந்தை மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூதூர் - இளக்கந்தை கடற்கரையில் இளக்கந்தை மீனவர்களின் ஏற்பாட்டில் இந்த குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் போது மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
சிலர் டைனமைட் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் தமது மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுகின்றது.
டைனமைட் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் மீன்கள் அழிவடைகின்றன.
இதனால் இளக்கந்தை கிராமத்தில் மீன்பிடியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுவரும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு 145 குடும்பங்கள் வாழ்கின்றனர் . இதில் 125 குடும்பங்கள் முழுமையாக மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டவர்களாவர்கள் என்றனர்.
மேலும், சட்டவிரோத டைனமைட் மீன்பிடி நடவடிக்கையை தடை செய்யுமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“சட்ட விரோத மீன்பிடியை தடைசெய்”, “அழிக்காதே வளங்களை அழிக்காதே”, “அனுமதி இல்லாத வாடிகளை உடனே அகற்று” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM