(நெவில் அன்தனி)
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடத்திவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 13 வயதுக்குட்பட்ட 3ஆம் பிரிவு 4ஆம் சுற்று கிரிக்கெட் போட்டி ஒன்றில் மருதானை சூசையப்பர் கல்லூரி அணி வீரர் 11 வயதுடைய ரிஷி யுதன் ஒரே இன்னிங்ஸில் இன்னிங்ஸில் 9 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
பிலியந்தலை, மாம்ப்பே தர்மராஜ மகா வித்தியாலய அணிக்கு எதிராக புனித சூசையப்பர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலாவது இன்னிங்ஸிலேயே வலது கை சுழல்பந்துவீச்சாளர் (Off spinner) ரிஷி யுதன் 9 விக்கெட்களைக் கைப்பற்றினார். துரதிர்ஷ்டவசமாக மற்றைய விக்கெட் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டது.
கடந்த வருடம் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் 13 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெற்றபோது ஓட்டம் எதுவும் கொடுக்காமல் 8 விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்த ரிஷி யுதன், இந்த வருடம் புனித சூசையப்பர் கல்லூரியில் இணைந்து 13 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடிவருகிறார்.
இந்த வருடம் ஏற்கனவே 8 விக்கெட் குவியலைப் பதிவுசெய்திருந்த ரிஷி யுதன் இரண்டாவது தடவையாக 8 விக்கெட் அல்லது அதற்கு மேல் கைப்பற்றி தனது பந்துவீச்சில் தனது அதீத ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித சூசையப்பர் அணி 9 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் ரிஷி யுதன் இரண்டாவது அதிகூடிய சம எண்ணிக்கையான 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தர்மராஜ மகா வித்தியாலய அணி ரிஷி யுதனின் சுழற்சியில் சிக்கி சகல விக்கெட்களையும் இழந்து 73 ஓட்டங்களைப் பெற்றது.
ரிஷி யுதன் 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 11.1 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களைக் கைப்பற்றினார். மற்றைய விக்கெட் ரன் அவுட் முறையில் வீழ்ந்தது.
புனித சூசையப்பர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போட்டி முடிவுக்கு வந்தது.
இதில் ஆரம்ப வீரர் யோமிக்க சில்வா ஆட்டம் இழக்காமல் 76 ஓட்டங்களையும் லவன் யோவானிக் 67 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 141 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM