நிலையான தீர்வுகளுக்கான தேசிய கொள்கை அவசியம் ; அரசாங்கத்தினை வலியுறுத்தும் விலங்குகள் நலக்கூட்டிணைவு

Published By: Digital Desk 7

07 Feb, 2025 | 11:00 AM
image

கருத்தடை தடுப்பூசி திட்டத்தின் மூலம் மனித இறப்புகளின் எண்ணிக்கையை வெற்றிகரமாகக் குறைத்துள்ளதாகவும், தெருநாய் கடி குறித்த சமீபத்திய ஊடக அறிக்கைகள் சில போலியானவை என்றும் விலங்கு நலக் கூட்டிணைவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கலாநிதி சமித் நாணயக்கார குறிப்பிட்டார்.

இலங்கையின் பல விலங்குகள் நலக் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களின் ஒன்றிணைவான விலங்குகள் நலக் கூட்டணியானது, அண்மைக்காலத்தில் வெளியாகிவரும் தவறான தரவுகள் பிரசாரம் மற்றும் தமது செயற்பாடுகள் பற்றிய தெளிவு படுத்தல்களை செய்துள்ளது.

இந்நிலையில் அந்த அமைப்பினால் கூறப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு, தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்துக.

அண்மையில் பதுளை பொது மருத்துவமனையில் நாய் கடியால் 6500 பேர் அனுமதிக்கப்படுவதாக செய்தியொன்று வெளியிடப்பட்டது. இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமான சம்பவங்கள் செல்லப்பிராணி நாய்களால் ஏற்படுத்தப்பட்டவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டக் குழுவின் உறுப்பினர்கள் தெருநாய் எண்ணிக்கையால் தான் இந்தப் பிரச்சினை தங்களுக்கு இருப்பதாகக் கூறினால், யானைகள் மற்றும் குரங்குகளைப் போலவே மாவட்ட மட்டத்திலும் தீர்வுகளைத் தேட அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும். ஆனால் அவர்கள் திடீர் முடிவுகளை எடுத்து, பிரச்சினையைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் செயற்பட்டால் அதுவொரு பெரிய குழப்பத்தை உருவாக்கக்கூடும் என்ற கவலை எமக்குள்ளது.

2007ஆம் ஆண்டில் நாய் கடியால் அறுபத்து மூன்று பேர் இறந்துள்ளனர். இருப்பினும், 2024 இல் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 20 ஆகக் குறைந்துள்ளது, மேலும் அவர்களில் 11 பேர் மட்டுமே நாய் கடியால் இறந்தனர்.

நாய் கடித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அரசாங்கம் பெரும் செலவை ஏற்கிறது என்று மற்றொரு அறிக்கை கூறுகிறது. உண்மையில் 2007 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட செலவு 600 மில்லியன் ரூபாவாகும்.

150ரூபாவாக இருந்த ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு இப்போது கிட்டத்தட்ட 300 ரூபா என்பதை இங்கே குறிப்பிட வேண்டியது முக்கியமானதாகும். இதனால் நாய்கடிக்கான சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தும் மருந்துகள் தற்போதுஇரு மடங்கு விலை அதிகரித்துள்ளது.

வெளிப்படையாகச் சொன்னால், மருத்துவமனைகளில் அந்த நாட்களில் இருந்த தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் அரைவாசி  மட்டுமே இப்போது தேவைப்படுகிறது. இந்நிலைமையானது, இப்பிரச்சினை ஏற்கனவே அரைப்பங்கு தீர்வினைக் கண்டுவிட்டது என்பதற்கான ஆதராமாகும். 

தற்போது அறுபது சதவீதமான தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது, எண்பது சதவீதமானவற்றுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இருப்பினும், எமது முயற்சிகளைப் பொருட்படுத்தாமல், மக்கள் பொறுப்பற்ற வகையில் நாய்க்குட்டிகளை தெருக்களில் விட்டுச் செல்லும் நிலைமைகள் நீடிக்கின்றன.

இத்தகைய சில குடிமக்களின் பொறுப்பற்ற நடத்தைகள் தான் இந்த விடயத்தினை ஒரு தேசிய அளவிலான திட்டமாக நாம் முன்னேற்றுவதற்காக போராடுவதற்கு காரணமாகின்றது. மேலும் தற்போதுள்ள ரேபிஸ் கட்டளை மற்றும் விலங்கு நலசட்டத்தினை திருத்துவதே பல பிரச்சினைகளுக்குத் தீர்வளிப்பதாக இருக்கும்.

கால்நடை மருத்துவர்களிடம் 'ரேபிஸ்' கட்டுப்பாட்டு திட்டம் 

அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் 'ரேபிஸ்' ஒழிப்புத் திட்டத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது கால்நடை மருத்துவர்களின் பற்றாக்குறை காரணம் என்பது கண்டறியப்பட்;டுள்ள நிலையில் அச்செயற்பாட்டை விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர் சம்பா பெர்னாண்டோ, பரிந்துரைக்கிறார். 

அவர், இலங்கையின் உண்மையான தெரு நாய் எண்ணிக்கை மூன்று சதவீதம் மட்டுமே காணப்படுவதோடு தெருக்களில் உள்ள 79சதவீதமான நாய்கள் கிருமி நீக்கம் செய்யப்படாத ஆண் நாய்கள் உரிமையாளர்களுடன் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன் இந்தப் பிரச்சினைக்கு தெருக்களில் இருந்து நாய்களை அகற்றுவது மட்டுமேயொரு தீர்வாகாது என்றும் குறிப்பிட்டார்.

'ரேபிஸ் வைரஸ்' என்பது எந்த பாலூட்டியையும் பாதிக்கும் ஆபத்துக்களைக் கொண்டதாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு கூட நாய்களை கருத்தடை செய்வதோடு மக்கள் தொகையில் 80சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி போடுவதன் ஊடாக இலங்கைத் தீவிலிருந்து 'ரேபிஸை' ஒழிப்பது சாத்தியமாகும் என்றும் பரிந்துரைக்கிறது. 

தடுப்பூசி போடப்பட்ட செல்லப்பிராணி நாய்கள் இருந்தால், அவை வனவிலங்குகளிடமிருந்து எமக்கான நம்பகமான பாதுகாவலராக இருக்கும். தெருக்களில் இருந்து நாய்களை நீக்கினால், அதற்குப் பதிலாக 'ரேபிஸ் வைரஸ்லால்' பாதிக்கப்பட்ட நரிகள் அல்லது கீரிகளை நாம் சமாளிக்க வேண்டியிருக்கும். சமீபத்தில் ஒரு நபர் மரநாய் கடியால் இறந்தார்;. அதேநேரம் நடைமுறையில் மக்கள் தொகையில் 80சதவீதமானவர்களுக்கு தடுப்பூசிபோட முடியாது. இருப்பினும் பொதுமக்கள் இணைந்து வாழக்கூடிய ஒரே உயிரினம் நாய்கள் மட்டுமே என்பது முக்கியமானது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் கருத்தடை திட்டங்களுக்கு ஆதரவு

அநுராதபுரம் நகராட்சி எல்லைகள் மற்றும் கோயில்களில் இருந்து கிட்டத்தட்ட 12,000 நாய்களை எவ்வாறு வெற்றிகரமாக கருத்தடை செய்தார்கள் என்பதையும், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்த திட்டத்தை புறநகர்ப் பகுதிகளுக்கு எவ்வாறு விரிவுபடுத்தினார்கள் என்பதையும் கருத்தில் கொள்வது நல்லதென விலங்குகள் நல ஆர்வலர் தாஷியா கப்டன் குறிப்பிட்டார்.

புறநகர்ப் பகுதிகளிலிருந்து ஏராளமான நாய்க்குட்டிகள் கோயில்களுக்கு அநாதரவாக விடப்பட்டால் இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டதாகவும் எங்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்ட எண்பத்தைந்து சதவீத நாய்களுக்கு உரிமையாளர்கள் இருந்தனர் என்பதை தனது குழுவினர் அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாய்களின் தொகை கட்டுப்பாடு தொடர்பாக யாரிடம் உதவி பெறவேண்டும் என்று தெரியாமல் இந்த மக்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். இதற்கு ஒரு சரியான வழிமுறையை நிறுவுவதற்கு முடிந்தால், மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை கருத்தடை செய்ய தயாராக உள்ளனர என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டது. ஆகவே  முன்னோடித் திட்டம் போன்று மேலும் பல சரியான திட்டங்களுடன் செயற்பட்டால் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது சாத்தியமாகும் என்றார்.

பூமியில் தங்குமிடம் நரகமாக மாறியது 

விலங்குகள் நலக்கூட்டணியின் நிர்வாகக் குழு உறுப்பினர் கிஹான் தினுஷா, நாய்களின் தங்குமிட நெருக்கடியைத் தீர்க்கும் என்ற கருத்து பிரபலமாக இருந்தாலும், உண்மையான நிலைமை முற்றிலும் நேர்மாறானது என்று எடுத்துரைத்தார்.

'நாய்களின் தங்குமிடங்கள் எப்படி இருக்கும், அது எவ்வாறு செயற்படுகிறது என்பது வெளிப்புறக் கட்சிகளுக்குத் தெரியாது. தற்போது, நாய்களின் தங்குமிடங்களை அமைத்தல் உலகளவில் காலாவதியான கருத்தாகக் கருதப்படுகின்றது. நாய்கள் சிறிய குழுக்களாக வாழ விரும்புகின்றன. வௌ;வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நாய்கள் ஒரு தங்குமிடத்தில் ஒன்றாகக் கூடும்போது, வலிமையானவை, பலவீனமானவை என்ற நிலைமைகள் காணப்படுவதோடு அவற்றின் குழுக்களுக்கு இடையே மோதல்கள் எழுகின்றன.

அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் நாங்களின் தங்குமிடங்களில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்களுக்கு விலங்குகள் நலன் குறித்த இரக்கமோ, புரிதலோ இல்லை. அதுமட்டுமன்றி அந்த தங்குமிடங்களைப் பராமரிப்பதற்கு அரசாங்கம் பெரும் செலவை ஏற்க வேண்டும். பார்வோ அல்லது டிஸ்டெம்பர் நோயால் பாதிக்கப்பட்ட விலங்கை தற்செயலாக அனுமதிப்பது தங்குமிடத்தில் உள்ள அனைத்து விலங்குகளின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும், இது ஏற்கனவே நடந்ததொன்று.

சமீப காலங்களில் அரசாங்கம் இதுபோன்ற பல தங்குமிடங்களைத் திறந்துள்ளது. வென்னப்புவ பிரதேச சபையால் நிறுவப்பட்ட வென்னப்புவ சுனக சேவனவில் கிட்டத்தட்ட நூறு நாய்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தன. 

விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் அதை மூடுமாறு அதிகாரிகளை கட்டாயப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் பூனைகள் மற்றும் நாய்களை குறித்த காப்பகத்துக்கு அண்மித்துள்ள வீதிகளில் விட்டுச் செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தும் பதாகைகளை அதிகாரிகளே வலிந்து வெளிப்படுத்த வேண்டியிருந்தது, ஏனெனில் தினமும் தாங்கமுடியாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் காப்பகத்திற்கு அருகில் விட்டுச் செல்லப்பட்டன.

அதுமட்டுமன்றி பொதுப்படையில் காப்பகங்களுக்கு அருகில் விலங்குகளை ஏற்றுக்கொள்ளவதற்காக தொழிலாளர்களுக்கு இலஞ்சம் வழங்கப்பட்ட சம்பவங்கள், விலங்குகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவு காணாமல் போனமை தொடர்பான சம்பவங்கள் கிட்டத்தட்ட அனைத்து காப்பகங்களும் பதிவாகியுள்ளன. 

நெல்லிக்குளம் காப்பகத்திலிருந்து ஒரு பீப்பாயிலிருந்து உலோகங்கள் வெளியான நிலையில் அதில் உணவருந்திய நாய்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் துயரமானது.

கடந்த அரசாங்கத்தால் 80மில்லியன் ரூபா செலவழித்து நிறுவப்பட்ட ஒரு காப்பகம் இன்னும் திருகோணமலையில் செயற்பட்டு வருகிறது, மேலும் எமக்குத் தெரிந்தபடி அது ஏற்கனவே நரகமாக மாறிவிட்டது. இறுதியாக, அங்கு முறையான கருத்தடை செயற்முறை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ஒரு குறிப்பிட்ட குழு அரசாங்கத்தை சிக்கலில் சிக்க வைக்கும் நோக்கில் சமூக ஊடகங்களில் வேண்டுமென்றே பிரச்சினைகளைத் தூண்டுகிறதா என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். 

தொகை முகாமை குறித்த தேசிய கொள்கை அவசியம்

சில அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட இலாபங்களை இலக்காகக் கொண்டு அரசாங்க அமைச்சர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துகிறார்கள். இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கக்கூடியவை.

எங்களுக்கு நேரம் கொடுங்கள் எங்களிடம் பாதை வரைபடம் உள்ளது. ஆறு மாதங்களுக்குள் நாங்கள் அடைய விரும்பும் முன்னேற்றம் இதுதான், நீண்ட காலத்திற்குள் இந்தப் பிரச்சினையை நாங்கள் முழுமையாகத் தீர்ப்போம் என்று குடிமக்களிடம் சொல்வதற்கு அரசாங்கத்துக்கு தைரியம் வேண்டும்.

இவை எமது மக்களின் ஆழமான மையத்தைத் தொடும் மிகவும் உணர்திறன் வாய்ந்த பிரச்சினைகள். எனவே, தீர்வுகளைச் செயற்படுத்துவதற்கு முன் இருமுறை யோசிப்பது முக்கியம், என்று கலாநிதி.நாணயக்கார மீண்டும் வலியுறுத்தினார்.

அருந்தி ஜெயசேகர  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07