மே 9 வன்முறை: சேதமடைந்த வீடுகளுக்கு 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் அதிகாரத்தின் மூலம் 122.41 கோடி இழப்பீடு பெற்றுள்ளார்கள் - நளிந்த ஜயதிஸ்ஸ

Published By: Vishnu

07 Feb, 2025 | 03:21 AM
image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்ட அசாதாரண நிலையில் போது தமது வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுக் கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் 43 பேர் தமது அரசியல் அதிகாரத்துடன் 122 கோடியே, 41 இலட்சத்து 34 ஆயிரத்து 737 ரூபாய் ( 122.41 கோடி) இழப்பீட்டை பெற்றுக் கொண்டுள்ளார்கள். இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து மதிப்பீடு செய்யுமாறு அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறையற்ற வகையில் நிதி பெற்றவர்கள், மதுபானசாலைக்கான அனுமதி பத்திரம் பெற்றுக் கொண்டவர்கள், ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்கள் இன்று அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். எந்த கூட்டணியமைத்தாலும் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க முடியாது. எதிர்வரும் காலங்களில் பலரின் ஊழல் மோசடிகளை பகிரங்கப்படுத்துவோம் என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்து, மே 9 சம்பவத்தின் போது சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு பெற்றுக் கொண்டவர்களின் பெயர் விபரங்களை சபையில் விரிவாக வெளியிட்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) நடைபெற்ற புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

எமது அரசாங்கத்தின் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டை தலைகீழாக இருந்து குறிப்பிட்டாலும் அது ஒருபோதும் வெற்றிப் பெறாது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே ஒருசில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடந்த அரசாங்கங்களை போன்று குற்றஞ்சாட்டுவதற்காக எம்மீது பழிசுமத்த வேண்டாம். அதிகாரத்தில் இருக்கும் போது வளங்களை தமக்கு மாத்திரம் பகிர்ந்துக் கொண்டவர்கள் மக்களுக்கு அந்த வளங்களை முறையாக வழங்கவில்லை.

கடந்த காலங்களில் மதுபானசாலை அனுமதி பத்திரம் பெற்றுக் கொண்டவர்களின் பெயர்களை வெளியிட்டோம். இன்னும் ஓரிரு தினங்களில் அவற்றின் முழு விபரத்தையும் வெளியிடுகிறோம்.தமது பெயரில் அனுமதிபத்திரத்தை பெறாமல் பிறிதொரு பெயரில் பத்திரம் பெறப்பட்டுள்ளது. ஆகவே வெகுவிரைவில் ஆதாரத்துடன் வெளிப்படுத்துகிறோம். சற்று பொறுமையுடன் இருங்கள்.

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுக் கொண்வர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டோம். சாதாரண மக்கள் நிதியத்தில் இருந்து 5 முதல் 10 இலட்சம் நிவாரண நிதியை பெற்றுக் கொள்வதற்கு காத்திருக்கின்ற நிலையில், அரச அதிகாரத்துடன் 15 இலட்சம் கோடி கணக்கில் நிதி பெற்றுக் கொண்டவர்களின் பெயர்களையும் வெளியிட்டோம். நாட்டு மக்கள் உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போராட்டத்தினால் வீடுகள் அழிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு அரசாங்கத்திடமிருந்து நட்டஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டவர்களின் விபரத்தை தெரிவிக்கிறேன். மக்கள் இவற்றை அறிந்துக் கொள்ள வேண்டும். அக்காலப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்யும் போது நட்டஈட்டுத் தொகையை அதிகரித்து மதிப்பீடுமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டத்தின் பிரகாரம் இயற்கை அனர்த்தம் மற்றும் வேறு வழிகளில் சொத்துக்களுக்கு முழுமையாக பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இழப்பீட்டுத் தொகையாக உயர்ந்தபட்சம் 25 இலட்சம் ரூபாவையே நட்டஈடாக வழங்க முடியும். அதுவும் ஒருசிலருக்கு கிடைப்பதில்லை.

இழப்பீட்டை குறிப்பிட்டுக் கொண்டு அரச அதிகாரத்துடன் தமக்கு ஏற்றாட் போல் நட்டஈட்டுத் தொகையை பெற்றுக் கொண்டுள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அதுகோரல 500400 ரூபாய்,விமல வீர திசாநாயக்க 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா, கீதா குமாரசிங்க 9 இலட்சத்து 72 ஆயிரம் ரூபா, திஸ்ஸ குட்டியராட்சி 11 இலட்சத்து 11 ஆயிரம் ரூபா, குணபால ரத்னசேகர 14 இலட்சத்து 12780 ரூபாய், பிரேம்நாத் சி தொலவத்த 23 இலட்சம், பிரியந்த ஜயரத்ன 27 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா, சம்பத் அதுகோரல 25 இலட்சத்து 610 ரூபா, ஜயந்த கெடகொட 28 இலட்சத்து 14800 ரூபாய், விமல் வீரவன்ச 29 இலட்சத்து 54 ஆயிரம் ரூபா, சன்ன ஜயசுமன 33 இலட்சத்து 34 ஆயிரம் ரூபா, அகில எல்லாவெல 35 இலட்சத்து 54250 ரூபாய், சமல் ராஜபக்ஷ 65 இலட்சத்து 30374 ரூபாய், அசோக்க பிரியந்த 72 இலட்சத்து 90500 ரூபாய், சமன் பிரியந்த ஹேரத் 105.2 இலட்சம் ரூபாய், ஜனக பண்டார தென்னகோன் 105.5 இலட்சம் ரூபாய், ரோஹித்த அபேகுணவர்தன116.4 இலட்சம் ரூபாய், சீதா அரம்பேபொல 137.8 இலட்சம் ரூபாய், சான் பிரதீப் 171.3 இலட்சம் ரூபாய், செஹான் சேமசிங்க 185.1 இலட்சம் ரூபாய், இந்திக்க அனிருத்த 195.5 இலட்சம் ரூபாய், மிலான் ஜயதிலக்க 223 இலட்சம் ரூபாய், ரமேஸ் பத்திரன 281 இலட்சம் ரூபாய், துமிந்த திசாநாயக்க 288 இலட்சம் ரூபாய், கனக ஹேரத் 292 இலட்சம் ரூபாய், டி.பி ஹேரத் 321 இலட்சம் ரூபாய், பிரசன்ன ரணவீர 327 இலட்சம் ரூபாய், டி.வீரசிங்க 372 இலட்சம் ரூபாய், சாந்த பண்டார 391 இலட்சம் ரூபாய், எஸ்.எம். சந்திரசேன 438 இலட்சம் ரூபாய், சனத் நிசாந்த 427 இலட்சம் ரூபாய், சிறிபால கம்லத் 509 இலட்சம் ரூபாய், அருந்திக பிரனாந்து 552 இலட்சம் ரூபாய், சுமித் உடுகும்புர 559 இலட்சம் ரூபாய், பிரசன்ன ரணதுங்க 561 இலட்சம் ரூபாய், கோகிலா குணவர்தன 587 இலட்சம் ரூபாய், மொஹான் டி சில்வா 601 இலட்சம் ரூபாய், நிமல் லன்சா 692 இலட்சம் ரூபாய், அலி சப்ரி ரஹீம் 709 இலட்சம் ரூபாய், காமினி லொகுகே 749 இலட்சம் ரூபாய், ஜோன்ஸ்டன் பெர்னான்டோ 934 இலட்சம் ரூபாய், கெஹேலிய ரம்புக்வெல்ல 959 இலட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் இழப்பீட்டுக்கான நட்டஈடு பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் 43 பேர் தமது அரசியல் அதிகாரத்துடன் 122 கோடியே, 41 இலட்சத்து 34 ஆயிரத்து 737 ரூபாய் ( 122.41 கோடி) இழப்பீட்டை பெற்றுக் கொண்டுள்ளார்கள். விவசாயிகளின் விளை நிலங்கள் சேதமடைந்தாலோ, வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்தாலோ குறைந்தளவான இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்வதற்கு எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும்.

இவர்கள் அரச அதிகாரத்துடன் அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகித்து இந்தளவான பெருந்தொகையை இழப்பீடாக பெற்றுக்கொண்டுள்ளார்கள். இதுவே கடந்த கடந்த கால அரசியல் இதனையே நாங்கள் கடந்து செல்கிறோம். இவர்கள் தற்போது பாராளுமன்ற அறையில் இருந்து கூட்டணியமைப்பது பற்றி பேசுகிறார்கள். கூட்டணியில் ஒன்றிணைவோம் என்று ஒன்று கூடுபவர்களில் மதுபானசாலை அனுமதிபத்திரம் பெற்றவர்களும், ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறையற்ற வகையில் நிதி பெற்றவர்களும் உள்ளார்கள்.

கடந்த கால மோசடிகளை வெளிப்படுத்தும் போது அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட ஒன்றிணைய கூட்டணியமைக்க ஒன்று கூடுகிறார்கள். புதிய மாற்றத்துக்காக இவர்கள் ஒன்றுப்படவில்லை. அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கவே முயற்சிக்கார்கள். எந்த கூட்டணியமைத்தாலும் நாங்கள் எமது செயற்பாட்டை நிறுத்த போவதில்லை. மக்களின் சொத்து முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் பல விடயங்களை வெளிப்படுத்துவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32
news-image

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ்...

2025-03-18 21:18:31
news-image

இலங்கை - இந்தியா பாலம் :...

2025-03-18 17:21:46
news-image

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; முறையாக...

2025-03-18 15:45:12
news-image

ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரிப்பதே தேசிய மக்கள்...

2025-03-18 17:28:27
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம் : பொது...

2025-03-18 17:24:12
news-image

6 அரசியல் கட்சிகள், 11 சுயாதீன...

2025-03-18 19:22:34
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து சட்ட அமுலாக்க...

2025-03-18 17:22:39