14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ். இந்து - கொழும்பு இந்து அணிகள் மோதவுள்ளன; இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 'சொல்லாடல்' விவாதம் நாளை

Published By: Vishnu

06 Feb, 2025 | 07:07 PM
image

(நெவில் அன்தனி)

யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் கொழும்பு இந்து கல்லூரிக்கும் (பம்பலப்பிட்டி) இடையிலான 14ஆவது இந்துக்களின் சமர் (2 நாள் மாபெரும் கிரிக்கெட் போட்டி) யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இளைஞர்களையும் விளையாட்டுத்துறையையும் ஊக்குவிக்கும் நன்னோக்குடன் இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு ஜனசக்தி குழுமம் (JXG) தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக பிரதான அனுசரணை வழங்குகின்றது.

விளையாட்டுத்துறைக்கும் நட்புறவுக்கும் உன்னதமான அடையாளமாகத் திகழும் இந்தத் தொடரின் இந்த வருட அத்தியாயம் கொழும்பில் நடைபெறுவதாக இருந்தது. பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வருடப் போட்டியை நடத்த யாழ். இந்து கல்லூரி முன்வந்தமை பாராட்டுக்குரியதாகும்.

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அடுத்த வருடம் தனது 75ஆவது பவள விழாவை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடவுள்ளது. அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்துக்களின் சமரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே இந்த வருடப் போட்டியை யாழ். இந்து கல்லூரி முன்னின்று நடத்துகிறது.

இது இவ்வாறிரக்க, மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் குறிக்கோளுடன் இரண்டு கல்லூரிகளுக்கு இடையில் சொல்லாடல் எனும் விவாதப் போட்டி நாளை மாலை நடைபெறவுள்ளது.

1982இல் ஆரம்பமான இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான இந்துக்களின் சமர், நாட்டில் நிலவிய அமைதியின்மை காரணமாக இரண்டு சந்தர்ப்பங்களில் சில வருடங்கள் தடைப்பட்டது.

1983இல் நிறுத்தப்பட்ட இப் போட்டிக்கு 2005இல் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டது. ஆனால், 2006இலிருந்து 2012வரை வடபகுதியில் நிலவிய அமைதியின்மை காரணமாக இப் போட்டி இரண்டாவது தடவையாகத் தடைப்பட்டது.

2013இலிருந்து இந்துக்களின் சமர் 2019 வரை தொடர்ச்சியாக நடைபெற்றது. ஆனால், கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக 2020, 2021களில் கிரிக்கெட் சமர் 3ஆவது தடவையாக நடைபெறவில்லை.

அதன் பின்னர் 2022இலிருந்து இப் போட்டி நடைபெற்றுவருகிறது.

இதுவரை நடைபெற்ற 13 மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு கல்லூரிகளும் தலா 3 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றன. 7 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

பிரியந்தன் தலைமையிலான யாழ். இந்து கல்லூரி கடந்த வருடம் நடைபெற்ற 13ஆவது இந்துக்களின் சமரில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

கொழும்பு - 4 இந்து கல்லூரி கடைசியாக சண்முகநாதன் கெனிஷன் தலைமையில் 2019இல் வெற்றிபெற்றிருந்தது.

இந்த இரண்டு கல்லூரி அணிகளில் யாழ். இந்து அணி சற்று பலம்வாய்ந்ததாகத் தென்படுவதாலும் அதன் சொந்த மைதானத்தில் போட்டி நடைபெறுவதாலும் இந்த வருடமும் அந்த அணி வெற்றிபெறும் என எதர்வுகூறப்படுகிறது.

ஆனால், கிரிக்கெட் விளையாட்டில் தற்போது மும்முரமாக ஈடுபட ஆரம்பித்துள்ள கொழும்பு இந்து கல்லூரி இந்த வருடப் போட்டியை இலகுவில் நழுவ விடாது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணிக்கு  கே. பிரிஷித் தலைவராகவும், ஏ. விதுஷன்   உதவி  தலைவராகவும், விளையாடுகின்றனர்.

இதேவேளை, கொழும்பு இந்து கல்லூரி அணிக்கு ஆர். தேஸ்க ர்  தலைவராகவும்  பி. ஸ்ரீ நிதுஷன்   உதவித் தலைவராகவும் விளையாடுகின்றனர்.

யாழ். இந்து அணியினர் அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்துவலமாக: ரி. கோகுலன் (உதவிப் பயிற்றுநர்), பி. சதீஸ்ராஜ் (விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்), கே. பிரிஷித் (தலைவர்), ஆர். செந்தில்மாறன் (அதிபர்), ஏ. விதுஷன் (உதவித் தலைவர்), வி. தயாபரன் (அணி பொறுப்பாசிரியர்), எஸ். அலன்ராஜ் (தலைமைப் பயிற்றுநர்), நிற்பவர்கள்: எஸ். அபிவர்ணன், ரி. பிரேமிகன், ஏ. பாமகன், ஜே. பவனன், ஐ. ஸ்ரீவஸ்தன், எஸ். சுபர்னன், ஜீ. லக்சிகன், ரீ. பிரீத்திகன், எஸ். ஹரிஹரன், எஸ். அச்சுதன், டி. ரோஷன், எஸ். கவிகரன், கே. நித்தீஸ், வி. ரதுசன், வி. ரதுஷன்.

கொழும்பு இந்து அணியினர்: அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: பி. சஷிதரன் (உதவிப் பயிற்றுநர்), சி. ஜேசன் (உதவிப் பயிற்றுநர்), எஸ். தர்மஷிவம் (விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்), பி. ஸ்ரீ நிதுஷன் (உதவித் தலைவர்), கே. நாகேந்திரா (அதிபர்), ஆர். தேஸ்கர் (தலைவர்), கே. ரஜீவ்காந்த் (அணி பொறுப்பாசிரியர்), எஸ். கோபிநாத் (தலைமைப் பயிற்றுநர்), நிற்பவர்கள்: எஸ். ஹர்ஷா மிதுமின, எஸ். சபேசன், எஸ். பிரதிக்ஷன், ரி. சந்தோஷ், எஸ். சர்விஷ், ஆர். விஷு சித்தாத், ஜீ. தூயவன், எஸ். பவிஷன், ரி. யாதவ், வி. யுவராஜ், எம். அபிஷேக், ரி. யதுஷன், எஸ். மிதுசிகன், வி. அபினேஷ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15
news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58