விஜய் ரிவியில் இடம் பெறும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடத்தில் பிரபலமான நடிகர் ராமர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அது வாங்குனா இது இலவசம்' எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகை நமீதா வெளியிட்டிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் எஸ். கே. செந்தில் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அது வாங்குனா இது இலவசம்' எனும் திரைப்படத்தில் ராமர், பூஜா ஸ்ரீ , கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ் , அருண் , அம்மையப்பன் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் மலைச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அர்வின் ராஜ் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவை படமாக உருவாகி இருக்கும் இதனை ஸ்ரீஜா சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''ஒரு சில செய்யும் தவறுகளால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? அதனால் என்ன விடயம் நடைபெறுகிறது? என்பதை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. 'தப்பு செய்தால் தண்டனை இலவசம்' எனும் கருத்தை முதன்மையாக வைத்து நகைச்சுவையுடன் கூடிய திரைக்கதையாக எழுதப்பட்டிருக்கிறது. '' என்றார்.
இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து , எதிர்வரும் 14 ஆம் திகதியன்று இந்த திரைப்படம் படமாளிகையில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஜய் ரிவி மூலம் உலக தமிழர்களிடத்தில் பிரபலமான ராமர் கதையின் நாயகனாக நடித்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM