'நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, 'ஜோ' படத்தின் மூலம் பிரபலமான நட்சத்திர நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கொமடி வித் ரொமான்டிக் ஜேனரிலான இந்த திரைப்படத்தை வை எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து படத்தின் டீசர் , ட்ரெய்லர், பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுவன் சங்கர் ராஜா, ஸ்வினீத் எஸ். சுகுமார், ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், என வெற்றி கூட்டணி அமைந்திருப்பதால், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் பாரிய கவனத்தைப் பெற்றிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM