இன்றைய திகதியில் குழந்தைகளுக்கான மருத்துவ பிரிவில் பச்சிளம் குழந்தைகளுக்கு என தனி பிரிவு ஏற்பட்டு, வளர்ச்சி அடைந்து வருகிறது என சுகாதாரத் துறை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
தற்போது உலகம் முழுவதும் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும், எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் இவர்களுக்கென பிரத்யேக சிகிச்சை அளிப்பதற்காக தனி பிரிவாக உருவாகி வளர்ச்சி அடைந்து வருகிறது.
பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவில் பிறந்து இருபத்தியெட்டு நாட்கள் வரையிலான பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இத்தகைய பிரிவு வைத்தியர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பிறக்கும் போதே மரபணு மற்றும் வேறு பிறவி குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் ஆகியவர்களுக்கு இவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பிரத்யேகமாக சிகிச்சை வழங்கி வருகிறார்கள்.
ஒன்பது மாதம் மற்றும் ஒரு வாரம் கருத்தரித்து அதன் பிறகு பிறக்கும் குழந்தைகள் ஒரு பிரிவாகவும் , இவர்களுக்கு ஏற்படும் மூச்சு திணறல், தாய்ப்பால் அருந்த இயலாத நிலை, மரபணு குறைப்பாடு பிரச்சனை, ஆகியவற்றிற்கு இந்த பிரிவு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்.
இவர்களைத் தவிர்த்து ஏழு மாதம் முதல் ஒன்பது மாதம் வரைக்குள்ளாக குறை மாத பிரசவம் காணும் குழந்தைகளுக்கான பிரத்யேக சிகிச்சை , இந்தத் தருணத்தில் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிரத்யேக சிகிச்சை, மேலும் இந்த பிரிவில் பிறக்கும் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கான சிகிச்சை மற்றும் இந்த பிரிவில் ஏதேனும் இதயக் குறைபாடு போன்ற பிறவி குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கான பிரத்யேக சிகிச்சை என இந்த பிரிவு வளர்ச்சி அடைந்து வருகிறது.
இத்தகைய சிகிச்சை முறை கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன் பிரத்யேகமாக இல்லை. தற்போது தான் இவை தொடங்கி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதே தருணத்தில் 28 நாட்களுக்கு பிறகும், 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் குழந்தைகள் நல மருத்துவர்கள் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.
- வைத்தியர் அண்டனி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM