உலகம் முழுவதும் தமிழர்களின் தெய்வமான முருகனை நாளாந்தம் வழிபடுவது என்பது தனி சிறப்பு வாய்ந்தது. அதிலும் செவ்வாய் தோஷம் இருக்கிறதா! முருகனை வழிபடுங்கள்.
திருமணம் செய்து கொள்வதில் தடை ஏற்பட்டிருக்கிறதா! முருகனை வழிபடுங்கள். அரசாங்க ஊழியராக இருப்பவர்கள் பதவி உயர்வு பெற வேண்டுமா! முருகனை வழிபடுங்கள்.
உயர்கல்வியில் தடை தாமதமா! முருகப்பெருமானை வழிபடுங்கள். புத்திர பாக்கியத்தில் தடை தாமதமா! முருகப்பெருமானை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். அதே தருணத்தில் முருகப்பெருமானை வணங்குவதிலும் சில சூட்சமங்கள் இருப்பதாக ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
முருக பெருமானுக்கு மாதந்தோறும் வரும் சஷ்டி திதி , செவ்வாய்க்கிழமை, கிருத்திகை நட்சத்திரம் என சில விசேடமான நாட்களில் அருகில் இருக்கும் சிவாலயங்களுக்கு சென்று அங்கு தனி சன்னதியுடன் வீற்றிருக்கும் முருகப்பெருமானின் சன்னதிக்கு செல்லுங்கள்.
அங்கு முருகப்பெருமானுக்கு இறைத்தொண்டு செய்யும் ஆலய ஊழியரிடம் ஆறு எலுமிச்சம் பழத்தை கொடுத்து, முருகப் பெருமானின் பாதத்தில் வைத்து விடுங்கள் என சொல்லுங்கள்.
அதன் பிறகு முருகப்பெருமானை மனதில் தியானித்து ஆறு முறை வலம் வர வேண்டும். அதன் பிறகு உங்களது கோரிக்கையை மீண்டும் ஒருமுறை முருகப்பெருமானிடம் சமர்ப்பித்து இதனை நிறைவேற்றி தாருங்கள் என பிரார்த்தனை செய்வதுடன், இதற்காக 108 முறை மீண்டும் முருக பெருமானின் சன்னதியை வலம் வாருங்கள்.
108 முறை வலம் வருவதற்கு உடல்நிலையில் அசௌகரியம் ஏற்படக்கூடும் என்றால் உங்கள் வயது என்னவோ அதற்கு ஏற்ற வகையில் வலம் வாருங்கள். இதனை நாளாந்தம் மேற்கொண்டாலும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொண்டாலும் அல்லது தை கிருத்திகை போன்ற நாட்களில் மேற்கொண்டாலும் உடனடியாக பலன் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM