நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, வட மாகாணத்தின் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

வெள்ளத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை வட மாகாணத்தின் சில பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நாளையதினம் வழமைப் போல பாடசாலைகள் நடைபெறும் எனவும் இன்று வழங்கப்பட்ட விடுறையை ஈடுசெய்வதற்காக எதிர்வரும் சனிக்கிழமை மேலதிக தினமாக பாடசாலைகள் நடத்தப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.