''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை நோக்கி சஜித்; “இங்கே சண்டித்தனம் கூடாது” - சபை முதல்வர் பிமல் : பாராளுமன்றத்தில் சலசலப்பு! 

06 Feb, 2025 | 07:11 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பிரதி சபாநாயகரை பார்த்து ''நடுவே பாய வேண்டாம்'' என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியபோது அதற்கு சபை முதல்வர் எதிர்ப்பு வெளியிட்டதால் சபையில் இன்று வியாழக்கிழமை (6) அமைதியின்மை ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் உரையாற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுந்தபோது, அதற்கு முன்னர் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை சம்பவம் தொடர்பில் பிரதமரிடம்  கேள்வியெழுப்பி உரையாற்றிக்கொண்டிருந்த போது, சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஸ்வி சாலி அவ்வேளையில், “உங்களது 27/2இன் கீழ் உரையாற்றுங்கள்” என தெரிவித்தபோது, “நடுவே பாய வேண்டாம்” என்று கூறிவிட்டு தனது உரையை தொடர்ந்தார்.

பின்னர் எதிர்கட்சித் தலைவரின் அந்த உரையை தொடர்ந்து எழுந்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, “இந்த சபையில் நிறைய சண்டியர்கள் உள்ளனர். நேற்று ஒருவர் சபாநாயகரை பார்த்து 'வெட்கம்' என்று கூறினார். இன்று ஒருவர் ஆளும் கட்சி பிரதம கொறடாவுக்கு ஏதோ கூறுகிறார். இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பிரதி சபாநாயகருக்கு 'குறுக்கே பாயாமல் இருங்கள்' என்கிறார். நீங்கள் இந்த வசனத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது நீங்கள் பிரதி சபாநாயகரிடம் மன்னிப்பு கோர வேண்டும். இங்கே சண்டித்தனம் கூடாது” என  தெரிவித்ததை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இவ்வேளையில் அனைவரையும் அமைதியாக இருக்குமாறு தெரிவித்த பிரதி சபாநாயகர், “நீங்கள் என்னை அவமதிக்கவில்லை. இந்த ஆசனத்தையே அவமதிக்கின்றீர்கள். நேற்று ஒருவர் இந்த ஆசனத்தை பார்த்து 'வெட்கம்' என்று கூறி அவமதித்துள்ளார். நீங்கள் அமருங்கள். நான் கூறுவதை கேளுங்கள். இந்த சபையின் ஒழுங்கை பேணுங்கள்" என்றார்.

"எதிர்க்கட்சித் தலைவரான உங்களிடம் இருந்து அந்த வசனம் வெளியானமை தொடர்பில் நான் அதிர்ச்சியடைந்தேன். நீங்கள் என்னை கூறாவிட்டாலும் இந்த ஆசனத்திற்கு கூறியுள்ளீர்கள். அதனை நீக்கிக்கொள்ளுங்கள்" என்றார்.

இதன்போது பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், "குறுக்கே பாய வேண்டாம் என்று நான் கூறினேன். அது உங்களை அவமதிப்பதற்கு தெரிவிக்கவில்லை. எனது பேச்சுக்கு தடை ஏற்படுத்த வேண்டாம் என்ற கருத்திலே தெரிவித்தேன். என்றாலும் எனது இந்த வார்த்தை  உங்களின் ஆசனத்தை அவமதிப்பதாக இருந்தால் அதனை நான் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். எனக்கு வறட்டு கௌரவம் கிடையாது” என்றார்.

இவ்வேளையில் கூறிய பிரதி சபாநாயகர், “எதிர்க்கட்சித் தலைவர் அதனை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கூறியதை நான் வரவேற்கின்றேன். இது தொடர்பில் சகல இலங்கையர்களும் பெருமை கொள்வர்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தியிடம் விசாரணை...

2025-03-21 13:29:14
news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16
news-image

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2025-03-21 13:00:45
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது...

2025-03-21 13:10:21
news-image

நாட்டை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கைகளுக்கு...

2025-03-21 13:09:27
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் ;...

2025-03-21 11:57:00
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-21 12:22:02
news-image

உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம்...

2025-03-21 12:24:26
news-image

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு...

2025-03-21 11:53:19