மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கற்சேனை, அம்பிளாந்துறை, வால்கட்டு, கடுக்காமுனை, அரசடித்தீவு போன்ற பல கிராமங்களை சூழ்ந்து காணப்படும் வில்லுக்குளத்தில் காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் இன்றைய தினம் வியாக்கிழமை (06) அவதானித்ததுடன், அப்பிரதேசத்திற்கு பொறுப்பான வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக வருகை தந்து காட்டுயானைகளை பார்வையிட்டனர்.
இது தொடர்பில் ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கூறுகையில்,
தற்போது பகல் வேளையாகவுள்ளது, எனினும், வேளாண்மை அறுவடை செய்யப்பட்டு கொண்டிருக்கின்ற இவ்வேளையில் கிராமவாசிகளும் விவசாயிகளும் தற்போது அதனை சூழ காணப்படுகின்றனர்.
எனவே காட்டு யானைகளை தற்போது விரட்டுவததானது சாத்தியமற்றது. எனினும் பிற்பகல் 6.00 மணிக்கு பின்னர் இந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தி விடுப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.
புதன்கிழமை (05) இரவு வால்கட்டு கிராமத்திற்குள் உள்நுழைந்த காட்டு யானைகள் வாழைத்தோட்டங்களையும், தென்னை மரங்களையும் வீழ்த்திவிட்டுச் சொன்றுள்ளன. இவ்வாறு காட்டு யானைகளினார் தாம் மிகுந்த மிகவும் அச்சத்துடன் வாழ்வதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM