பட்டாபுரம் கிராமத்தில் நீர் நிலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

06 Feb, 2025 | 04:46 PM
image

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நீர் நிலையிலிருந்து இன்று வியாழக்கிழமை(06) பகல் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

 சடலமாக மீட்கப்பட்டவர் பட்டாபுரம் கிராமத்தைச் சேரந்த 56 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இவர் இன்றைய தினம் அதிகாலை மீன் பிடிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

மீன் பிடிக்கச் சென்றவர் பகல் வேளையாகியும் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர்.

இதன்போது அவர் நீர் நிலையில் சடலமாக  கிடப்பதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், நீர் நிலையிலிருந்த சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பகிர்வு...

2026-05-12 15:50:13
news-image

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிப்பு...

2026-05-12 15:32:05
news-image

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல்...

2026-05-12 14:58:15
news-image

பேராசிரியர் வித்யாநிதி எம்.எஸ். மூக்கையா காலமானார்

2026-05-12 15:50:57
news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37
news-image

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்...

2026-05-12 12:52:31