சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த வேண்டாம் - ஹெக்டர் அப்புஹாமி ஆளும் தரப்புக்கு அறிவுறுத்தல்

Published By: Digital Desk 7

06 Feb, 2025 | 05:18 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும்  வீட்டை மீளப்பெறுவதையும், பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவுகளின் விலையை அதிகரிப்பதையும் பற்றி  பேசிக் கொண்டிருக்காமல் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் ஏனெனில்  கடந்த காலங்களில் போதுமான அளவு பேசி முடித்து விட்டீர்கள். வெறுப்பு, சேறு பூசலை  பிரத்தியேக நாமமாக கொண்டு செயற்பட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி ஆளும் தரப்பினரிடம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (06)  நடைபெற்ற  புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

புலமை சொத்து சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி பற்றி ஆளும் தரப்பினர் பேசவில்லை. மாறாக வெறுப்புக்களை மாத்திரமே தமது உரையில் முன்வைக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருடன்  பேச்சுவார்த்தையில்  ஈடுபடாமல் ஆளும் தரப்பினருடனா ? பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது. ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கும் போது  அதற்கு எதிராக ஒன்றிணைவது எதிர்க்கட்சிகளின் கடப்பாடாகும்.

தேயிலை,கறுவா,இறப்பர், தெங்கு ஆகியன இலங்கையின் பிரதான ஏற்றுமதி பொருளாக காணப்படுகின்றன.ஆனால் இலங்கையின் தேயிலை சீன நாட்டு தேயிலை உற்பத்தியாகவே சர்வதேச சந்தையில்  விநியோகிக்கப்படுகிறது. இலங்கையின் உற்பத்திகளின் பிரத்தியேக நாமம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன.

ஆகவே இழக்கப்பட்டுள்ள உற்பத்தி நாமத்தை மீள  பெற்றுக்கொள்வதற்கு விசேட திட்டங்கள்  வகுக்கப்பட வேண்டும். ஒழுங்கு விதிகளை நிறைவேற்றி விட்டு அவற்றை கிடப்பில் போடாமல், முறையாக செயற்பட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

தேங்காய் உட்பட உபரி பயிர்ச்செய்கைகளை ஊக்குவிப்பதற்கு விசேட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.  தேங்காய் பால் எடுக்க வேண்டாம், தேங்காய் சம்பல் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டுக் கொண்டிருக்காமல், தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுங்கள். நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும்  வீட்டை மீளப்பெறுவதையும், பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவுகளின் விலையை அதிகரிப்பதையும் பற்றி  பேசிக் கொண்டிருக்காமல் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் ஏனெனில்  கடந்த காலங்களில் போதுமான அளவு பேசி முடித்து விட்டீர்கள். வெறுப்பு, சேறு பூசலை  பிரத்தியேக நாமமாக கொண்டு செயற்பட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு...

2025-03-21 11:53:19
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு -  6...

2025-03-21 12:08:17
news-image

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் !

2025-03-21 11:51:15
news-image

வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து :...

2025-03-21 11:31:24
news-image

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் ஆஜராகாது இருந்தால்...

2025-03-21 11:13:13
news-image

மாத்தளையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 95...

2025-03-21 11:01:18
news-image

தலவாக்கலை மிடில்டன் பஸார் மதுபானசாலை அருகில்...

2025-03-21 10:47:00
news-image

முக்கிய உள்ளூராட்சிமன்றங்களில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு

2025-03-21 10:49:14
news-image

பரீட்சார்த்த வேலையை மீண்டும் செய்தால் நாட்டுக்கு...

2025-03-21 10:45:19
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் எமது...

2025-03-21 09:54:11
news-image

அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள்...

2025-03-21 09:52:35
news-image

அம்பாறை மாவட்டத்தில் 19 உள்ளூராட்சி சபைகளுக்கு...

2025-03-21 10:27:27