அரச நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி தனிநபர் தரவு சேகரிப்பு மற்றும் பண மோசடி - இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு

Published By: Digital Desk 2

06 Feb, 2025 | 04:47 PM
image

(செ.சுபதர்ஷனி)

அரச நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி தனிநபர் தரவு சேகரிப்பு மற்றும் பண மோசடி இடம்பெறுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் அரச நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக உண்மைக்குப் புறமான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. குறித்த போலி தகவல்களினூடாக கிடைக்கப்பெறும் இணைய இணைப்புகளினுள் பிரவேசிப்பதன் மூலம் தனிநபர் தரவுகள் திருடப்படுவதுடன் அக்குழுவினர் பண மோசடியிலும் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளரான ஷாருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார். பல அரச நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி அரச தொழில் வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அதற்கான புதிய ஆட்சேர்ப்புகள் இடம்பெற உள்ளதாகவும் பல விளம்பரங்கள் வாட்சப், முகப்புத்தகம் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் பகிரப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்குடனும் தனிநபர் தொடர்பான முக்கிய தரவுகளை சேகரிக்கும் நோக்குடனும் மேற்படி மோசடி இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. 

அடையாள அட்டை பிரதிகள் கடவுச்சீட்டு பிரதிகள், விமான பயணச்சீட்டு பிரதிகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின் தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு இடம்பெறுகிறது.

தற்போது இம்மோசடித் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறான மோசடிகார்களின் போலியான தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள்...

2025-03-18 16:05:35
news-image

வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்த யூடியூப்...

2025-03-18 15:57:57
news-image

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள்...

2025-03-18 15:35:08
news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:30:43
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53
news-image

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு...

2025-03-18 13:18:04
news-image

61 கிலோ மீற்றர் தூரம்கொண்ட நக்கிள்ஸ்...

2025-03-18 16:32:26