விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் நெல் விலைகளை நிர்ணயித்துள்ளது - மட்டு. கமக்காரர்கள் அதிகார சபை சாடல்

06 Feb, 2025 | 01:34 PM
image

விவசாயிகளின் நெற்செய்கைக்கான செலவு என்ன, விவசாயிகளின் கஷ்டங்கள் என்ன என்பதை கவனத்தில் கொள்ளாமல், விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு இந்த அரசாங்கம் நெல்லுக்கான விலைகளை நிர்ணயித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அதிகார சபையின் செயலாளர் நிரஞ்சன் தெரிவித்தார்.

வெள்ள அனர்த்தம் காரணமாக பாரிய நஷ்டங்களை எதிர்கொண்ட விவசாயிகள் அதிலிருந்து மீளமுடியாத நிலையில் உள்ளபோது அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் கவலையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

நாங்கள் நெல் கொள்வனவு செய்வதற்காக தேசிய ரீதியில் உள்ள சங்கங்களுடன் இணைந்து விலையொன்று நிர்ணயம் செய்யப்பட்டு அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஏக்கருக்கு 25 மூடைகள் என்ற வகையிலேயே இந்த நெல் விலை மிகவும் குறைந்ததாக தீர்மானிக்கப்பட்டு அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதை கருத்தில் கொள்ளாமல் அரசாங்கம் அதனை விட குறைவான நெல் விலையை அறிவித்துள்ளது.

வெள்ள அனர்த்தம் காரணமாக விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை நாடளாவிய ரீதியில் எதிர்கொண்டுள்ளனர். ஏக்கருக்கு சிலருக்கு நான்கு ஐந்து மூடைகளும் அறுவடை கிடைத்துள்ளது. ஆனால், அரசாங்கம் அவற்றினை கருத்தில் கொள்ளவில்லை. உர விலைகளை குறைக்காமல், எண்ணெயின் விலையினை குறைக்காமல், நெல் விலையை மட்டும் குறைத்து கொள்வனவு செய்ய முனைகிறது.

முழு நம்பிக்கை கொண்டே இந்த அரசாங்கத்தை நாங்கள் ஆட்சிக்கு கொண்டுவந்தோம். விவசாயிகளை கருத்தில்கொள்ளுங்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17