(எம்.நியூட்டன்)
யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஜனாதிபதிக்கு பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது என காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினர் (PARL) வட மாகாண ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர்.
காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (5) மாலை நடைபெற்றபோது இதனை தெரிவித்தனர்.
அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கில் முன்னைய ஜனாதிபதியின் காலத்தில் 243 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. அந்தக் காணியை விவசாயக் காணி என்று தவறாக அடையாளப்படுத்துகின்றனர். அது மக்களின் குடியிருப்புக் காணி.
அந்தப் பகுதியிலுள்ள இராணுவ முகாமும் இன்னமும் அகற்றப்படவில்லை. மக்கள் குடியிருக்கவும் அனுமதிக்கப்படவில்லை.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துகொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் வலி.வடக்கில் இன்னமும் மீள்குடியமர வேண்டியவர்களின் எண்ணிக்கை தொடர்பில் தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது.
எமது காணிகளில் பாதுகாப்புத் தரப்பினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இப்போதும் எமது காணிகளுக்குள் பாதுகாப்புத் தரப்பினர் புதிய கட்டடங்களை அமைக்கின்றனர்.
பலாலி வீதியில் இன்னமும் மூன்று கிலோ மீற்றர்கள் விடுவிக்கப்பட்டாலே மக்களுக்கு முழுமையான நன்மை கிடைக்கும்.
விமான நிலையத்துக்கு மேலதிகமாக காணிகள் சுவீகரிக்கப்படத் தேவையில்லை. ஏற்கனவே சுவீகரித்த காணிகளே போதுமானது.
அதேபோன்று தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதக் கட்டடம் ஆகும். அந்த விகாரைக்கு உரியதான காணியை மாற்றுக்காணியாக வழங்கினாலும் அது தொடர்பிலும் சந்தேகம் இருக்கிறது என காணி உரிமையாளர்கள் இந்தச் சந்திப்பில் தெரிவித்தனர்.
அத்துடன், மாற்றுக்காணியின் உறுதியில் சிக்கல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர்கள், தமது காணிகளை விடுவித்துத் தரவேண்டும். கிளிநொச்சியில் இரணைதீவில் கடற்படையினர் இப்போதும் பாஸ் நடைமுறையைப் பேணுகின்றனர் என்றும் பாதுகாப்புத் தரப்பினரால் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அதேபோன்று மன்னார் மாவட்டத்திலும் சிறப்பு அதிரடிப்படையினராலும் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன என்றும் காணி விடுவிப்பின் அவசியத்தை முல்லைத்தீவு மாவட்டப் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
மேலும், யாழ். மாவட்டத்தில் காணியற்ற 114 குடும்பங்கள் மருதங்கேணியில் குடியமர்வதற்கு இணக்கம் வெளியிட்டபோதும் அவர்களுக்கு காணிகள் இதுவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை.
வவுனியா மாவட்டத்தில் அரச காணிகள் பகிர்ந்தளிப்பில் நிலவும் சிக்கல் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த சந்திப்பில் வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் காணி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த விபரங்களை கேட்டறிந்த ஆளுநர், காணி பிரச்சினைக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM