இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப் பிரிவின் ஏற்பாட்டில் கடந்த 4ஆம் திகதி ஓட்டமாவடி டைவர்ஸ் பார்க் வளாகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப் பிரிவு அமைப்பின் தலைவர் (அல் ஹஜ்) எம்.எம்.முபாறக் தலைமையில் அமைப்பின் செயலாளர் ஏ.எல்.சதாமின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தரவிக்குளம், தொப்பிகல 232வது படைப்பிரிவின் கட்டளைத் அதிகாரி கேர்ணல் ஆர்.ஆர்.சீ.கருணாரத்ன (RWP) கலந்துகொண்டார்.
அத்துடன், விஷேட அதிதிகளாக SLNS கஜபா படைப்பிரிவு அதிகாரி கமாண்டர் நவரத்ன பண்டார, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார, விமானப்படை அதிகாரி ஸ்கொற்றன் தலைவர் மதுரங்க, சிறப்பு அதிதிகளாக கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஏ.தாஹிர் ஆகியோருடன் சர்வ மத தலைவர்கள், அக்கரைப்பற்று தக்வா அவசர பிரிவின் தலைவர் அல்-ஹாஜ் எம் ஹயாத், கல்விமான்கள், பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகள் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்களின் மேலைத்தேய வாத்திய குழுவினரின் அணிவகுப்புடனும் மீராவோடை அல்-ஹிதாயா வித்தியாலயத்தின் கலாசார அணிவகுப்புடனும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பகுதிநேர கராத்தே மாணவர்களின் தற்காப்பு கலை நிகழ்வுகளுடனும் வரவேற்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, தேசிய கொடி ஏற்றி தேசிய கீதத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வுகள் முப்பெரும் நிகழ்வுகளாக ஒழுங்கமைக்கப்பட்டு மூன்று இடங்களில் நடைபெற்றன.
படகோட்ட போட்டி, முதலுதவிப் பயிற்சி, கௌரவிப்பு நிகழ்வு என்பன டைவர்ஸ் பார்க் வளாகத்தில் நடைபெற்றன.
மூவ் கல்குடா டைவர்ஸ் மற்றும் தியாவட்டவான் அர்ரஷாத் விளையாட்டுக்கழகம் இணைந்து தியாவடவான் அரபா வித்தியாலய மைதானத்தில் கிரிக்கெட் போட்டியினையும், முனை முன்னேற்றக் கழகத்துடன் மூவ் கல்குடா டைவர்ஸ் இணைந்து முனை பார்க் வளாகங்களில் சிறுவர் போட்டி நிகழ்ச்சிகளையும் நடத்தின.
இதன்போது போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு அதிதிகளால் விருதுகளும் வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM