முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும் கொமர்ஷல் வங்கி 

06 Feb, 2025 | 10:13 AM
image

கொமர்ஷல் வங்கி இலங்கையில் முன்பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) மற்றும் அரசாங்க பங்குதாரர்களுடன் கைகோர்க்கின்றது. 

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் முன் பள்ளி  கல்வியை மேம்படுத்துவதற்கு அரசாங்கப் பங்காளர்களுக்கு உதவியாக செயற்படும் UNICEF பணிக்கான பங்களிப்பாக, முன்பள்ளியை மேம்படுத்துவதற்கு கொமர்ஷல் வங்கி ஆதரவளிக்கவுள்ளது. 

பாதுகாப்பான, மிகவும் சமமான, தரமான பாலர் கற்றல் சூழல்களை வழங்குவதற்கான மாகாணத்தின் முயற்சிகளுக்கு இந்த பங்குடைமையானது ஆதரவினை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

இத்திட்டத்தில் முழுப் பாடசாலையையும் புதுப்பித்தலுடன் மேம்படுத்துதல் மற்றும் தரமான தளபாடங்கள் மற்றும் கற்பித்தல் - கற்றல் உபகரணங்களை வழங்குதல் என்பன அடங்குகின்றன.

UNICEFஆனது 2022ஆம் ஆண்டு முதல் அதன் பங்குதாரர்களின் நிதியுதவியுடன், பின்தங்கிய பகுதிகளில் உள்ள 40 முன் பள்ளிகளின் கற்றல் சூழலை மேம்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஊவா மற்றும் மத்திய மாகாண அலுவலகங்களுக்கு ஆதரவளித்து வருகிறது.

இந்த தனியார் - அரசாங்க பங்குடைமையானது, ஆரம்ப வயதுக் கல்வியை வலுப்படுத்தவும், தரமான முன்பள்ளி கல்வியுடன் மிகவும் பின்தங்கியவர்களை அடைவதன் மூலம் இளம் மாணவர்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும் பங்குதாரர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு புதிய முன்மாதிரியை பிரதிபலிக்கிறது.

கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்ஃபிரதம நிறைவேற்றதிகாரி திரு சனத் மனதுங்க, UNICEF வதிவிடப் பிரதிநிதி திரு கிறிஸ்டியன் ஸ்கூக் உடன் வங்கியின் பெருநிறுவன வங்கியியல் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் திரு ஹஸ்ரத் முனசிங்க, UNICEF வளத் திரட்டல் அதிகாரி திருமதி ஃபர்சானா கான், வங்கியின் நிலைபெறுதகு மற்றும் மகளிர் வங்கியியல் மற்றும் சமூகப்பொறுப்பு  பிரிவின் பிரதம முகாமையாளர் திருமதி கமலினி எல்லாவல மற்றும் நிலைபெறுதகு மற்றும் மகளிர் வங்கியியல் மற்றும் சமூகப்பொறுப்பு பிரிவின் உதவி முகாமையாளர் திரு கயன் விக்ரமரத்ன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right