இந்தியாவின் சர்வதேச நாடக விழாவான பாரத் ரங் மஹோத்சவ்வின் (BRM) வெள்ளி விழாவைக் குறிக்கும் முகமாக, இந்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சின் கீழான தேசிய நாடகப் பாடசாலையின் ஒழுங்கமைப்பில் 2025 பெப்ரவரி 6 முதல் 9 ஆம் திகதி வரை கொழும்பில், பாரத் ரங் மஹோத்சவ் நடத்தப்படவுள்ளது.
இலங்கையின் கட்புல மற்றும் அரங்கக் கலைகள் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தால், கொழும்பிலுள்ள டவர் மண்டபம் மற்றும் பானிபாரத அரங்கத்தில் இவ்விழா நடத்தப்படுகின்றது.
2. 'பரங்கம்' என அழைக்கப்படும் பாரத் ரங் மஹோத்சவ் உலகின் மிகப்பெரிய நாடக விழாவாகும். 2025 ஜனவரி 28 முதல் பெப்ரவரி 16, வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தில் உள்ள 13 நகரங்களில் இவ்விழா நடைபெறுகின்றது.
இந்த முன்னுதாரணமான முயற்சி மூலம், தேசிய நாடகப் பாடசாலையின் சர்வதேச ஈடுபாடு மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விழாவின் எல்லைகள் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. பாரத் ரங் மஹோத்சவ் 2025இன் கருப்பொருளாக "ஒரே வெளிப்பாடு, அதியுயர் படைப்பு" அமைந்திருக்கும் நிலையில் இக்கருப்பொருளானது, படைப்பாற்றலில் ஒற்றுமையின் உணர்வை எதிரொலிக்கிறது.
பாரத் ரங் மஹோத்சவ் 2025 இல் ரஷ்யா, இத்தாலி, ஜேர்மனி, நோர்வே, செக் குடியரசு, நேபாளம், தாய்வான், ஸ்பெயின் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தனித்துவமான படைப்புகள் இடம்பெறுகின்றன. இப்படைப்புகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 13 இடங்களில் காட்சிப்படுத்தப்படும்.
3. கொழும்பில் நடைபெறும் விழாவின் அங்கமாக பெப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் டவர் மண்டபத்தில் இந்தி மொழியிலான ‘தாஜ்மஹால் கா டெண்டர்’ மற்றும் ‘பாபுஜி’ ஆகிய படைப்புகள் அரங்கேற்றப்படும், அதைத் தொடர்ந்து பெப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் பனிபாரத அரங்கத்தில் சிங்கள மொழியிலான ‘ரோமியோ அண்ட் ஜூலியட்’ மற்றும் ‘சிந்து கிரில்லி- 2 (Veronica Returns) ஆகியவை அரங்கேற்றப்படும். கொழும்பில் பாரத் ரங் மஹோத்சவத்தின் ஆரம்ப விழா 2025 பெப்ரவரி 6 ஆம் திகதி மாலை 6 மணிக்கு மருதானையில் உள்ள டவர் மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4. இவ்விழா குறித்த மேலதிக தகவல்களுக்கு, NSD/BRM ஆகியவற்றின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களைப் பார்வையிடவும்: https://nsd.gov.in/, www.brm.nsd.gov.in. கொழும்பில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள், icc.colombo@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM