(நெவில் அன்தனி)
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடினாலும் சரி, முதலில் களத்தடுப்பில் (பந்துவீச்சு) ஈடுபட்டாலும் சரி ஆரம்பம் திறமையாக அமைவது அவசியம் எனவும் அது தொடர்பாக அணிக்குள் தீவிரமாக கலந்துரையாடியுள்ளதாகவும் ஊடகவியலாளர்களிடம் இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா இன்று பிற்பகல் தெரிவித்தார்.
முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் மிக மோசமாக தோல்வி அடைந்த இலங்கை, நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது போட்டியில் எதிர்நீச்சல் போட்டு வெற்றிபெற்று தொடரை சமப்படுத்த முயற்சிக்கவுள்ளது. அத்துடன் டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் மீண்டும் 5ஆம் இடத்திற்கு முன்னேறுவதும் இலங்கையின் குறிக்கோளாகும்.
காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்க ஆடுகளம் இலங்கை அணியினருக்கு பரிச்சயமானது எனவும் சுழல்பந்துவீச்சாளர்களே அதிக விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
'முதலாவது போட்டியில் எமது சுழல்பந்துவீச்சாளர்கள் அதனை சாதமாகக்கிக்கொள்ளவில்லை. எனினும் இரண்டாவது போட்டியில் எமது சுழல்பந்துவீச்சாளர்கள் திறமையாக பந்துவீசி போட்டியை எமக்கு சாதகமாகத் திருப்புவர் என எதிர்பார்க்கிறேன். முதலாவது போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆரம்பித்தபோதிலும் திட்டத்திற்கு அமைய செயல்படத் தவறிவிட்டனர். துடுப்பாட்டத்தில் ஒருவர் அல்லது இருவர் 100, 150 ஓட்டங்களுக்கு மேல் பெறவேண்டும் அப்போதுதான் மற்றையவர்களால் இலகுவாக பங்களிக்கக் கூடியதாக இருக்கும். இந்தப் போட்டியில் சகலதுறைகளிலும் நாங்கள் திறமையை வெளிப்படுத்துவோம்' என்றார் தனஞ்சய டி சில்வா.
திமுத் கருணாரட்னவின் ஓய்வு எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என வினவியபோது,
'அவர் ஒரு திறமைவாய்ந்த, அனுபவம் வாய்ந்த ஆரம்ப வீரர் என்பதை அவரது தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. அவரது இடத்தை நிரப்பக்கூடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவருடன் யாரையும் ஒப்பிடமுடியாது. அவர் தனது பிரியாவிடை போட்டியில் அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்குவார் என நம்புகிறேன்' என பதிலளித்தார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க விளையாடுவார் எனவும் சுழல்பந்துவீச்சில் எந்த மூவரை இணைப்பது என்பது குறித்து நாளை காலை தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இலங்கை குழாத்திலிருந்து விடுகைபெற்று உள்ளூர் போட்டிகளில் விளையாட கொழும்பு திரும்பியுள்ள விஷ்வா பெர்னாண்டோவுக்குப் பதிலாக ரமேஷ் மெண்டிஸ் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். சகலதுறை வீரரான ரமேஷ் மெண்டிஸ் பெரும்பாலும் இறுதி அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் டெஸ்டில் பிரகாசிக்கத் தவறிய ஓஷத பெர்னாண்டோவும் நிஷான் பீரிஸும் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார்கள் என அறியக் கிடைக்கிறது.
அணிகள்
இலங்கை: திமுத் கருணாரட்ன, பெத்தும் நிஸ்ஸன்க, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ், ப்ரபாத் ஜயசூரிய, ஜெவ்றி வெண்டசே, அசித்த பெர்னாண்டோ அல்லது லஹிரு குமார.
அவுஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, ட்ரவிஸ் ஹெட், மானுஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், ஜொஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி, போ வெப்ஸ்டர், மிச்செல் ஸ்டார்க், மெத்யூ குணேமான், நெதன் லயன், டொட் மேர்பி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM