எம்மில் பலரும் தங்களுடைய இலட்சியத்தை நோக்கி பயணித்துக் கொண்டே இருப்பார்கள் லட்சியம் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கும். சிலருக்கு அவர்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து மகிழ்ச்சி அடைவார்கள்.
ஆனால் பலரும் தங்களுடைய நினைத்த காரியத்தை நடத்த கடுமையாக போராடிக் கொண்டிருப்பார்கள். வழிமுறையை தெரிந்திருந்தாலும் சூட்சமத்தைப் புரிந்து கொண்டிருந்தாலும் அதனை பயன்படுத்தி, நினைத்ததை நடத்திக் கொள்ள இயலாத சூழல் தொடர்ந்து கொண்டிருக்கும். வேறு சிலருக்கு நல்ல நோக்கத்திற்காக சிலவற்றை செய்ய வேண்டும் என நினைப்பார்கள்.
ஆனால் அவர்களால் சிறு அடியை கூட எடுத்து வைக்க முடியாது. அவர்களுக்கு மன தடையும், மாயத்தடையும் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கும். இவர்கள் அனைவருக்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் நினைத்த காரியத்தை செயல்படுத்த எளிமையான வழிமுறை ஒன்றை எடுத்துரைத்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : தேங்காய்- நெய் -இரட்டை திரி.
நீங்கள் பிறந்த கிழமையை தெரிவு செய்து கொள்ளுங்கள். அன்று காலையில் நீராடி குலதெய்வத்தை மனதில் தியானித்து பூஜை அறையில் தேங்காயை சமமாக உடைத்து, அதன் இரண்டு பக்கத்திலும் நான்கு பாகமாக சமமாக கணக்கிட்டு, குங்குமம் இட்டு, அதில் இரட்டை திரியை வைத்து நெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
இந்த தேங்காய் மூடிகளை பித்தளையாலான தாம்பாளத் தட்டில் வாழை இலையை வைத்து, அதன் மீது பச்சரிசியை பரப்பி அதன் மேல் இந்த இரண்டு நெய் தேங்காய் தீபத்தையும் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும்.
தேங்காய் சமமாக உடைக்கப்படவேண்டும். சுத்தமான பசு நெய்யை ஊற்ற வேண்டும். கண் உள்ள பகுதி உங்களுடைய பூஜை அறையில் உள்ள கடவுளின் உருவப்படத்திற்கு வலது புறமும், மற்றொரு தேங்காய் மூடியை இடது புறமும் வைத்து இறைவனின் பிரார்த்திக்க வேண்டும்.
தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் இத்தகைய தேங்காய் நெய் தீபத்தை ஏற்றி வழிபட தொடங்கினால் உங்களுடைய காரியம் அதாவது நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி வெற்றி பெறுவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM