புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண சிகிச்சை

Published By: Digital Desk 7

05 Feb, 2025 | 05:36 PM
image

எம்மில் பலரும் வார இறுதியில் நடைபெறும் விருந்துகளில் குறிப்பாக மது விருந்துகளில் பங்கு பற்றி அளவுக்கு அதிகமாக பசியாறுவார்கள். அதன் பிறகு நெஞ்செரிச்சல் காரணமாக ஏப்பம் விடுவார்கள். இது பலருக்கு அசௌகரியத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தும். சிலருக்கு இந்த தருணத்தில் வாய் துர்நாற்றம் வீசும் . இதனால் இத்தகைய பாதிப்பிற்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

எம்முடைய வயிற்றிற்கு செல்லும் உணவு பாதையில் இயல்பான அளவைவிட கூடுதலான அளவில் வாயு  குமிழ்கள் இருப்பதால் புளித்த ஏப்பம் ஏற்படுகிறது. எம்மில் சிலர் உணவை வேகமாக சாப்பிடுவதன் காரணமாகவும், புகை பிடித்தல் காரணமாகவும், வாயில் சவ்வு மிட்டாயை சுவைத்துக் கொண்டிருப்பதாலும் இயல்பான அளவைவிட அதிக அளவு வாயுவை உட்கொள்வதால் வாயு குமிழ்கள் உருவாகிறது. மேலும் உடலுக்குள் வாயுவை உண்டாக்கும் சில உணவுப் பொருட்களை சாப்பிடுவதாலும் இதனால் ஏற்படும் ஒவ்வாமையின் காரணமாகவும் இத்தகைய புளித்த ஏப்பம் ஏற்படக்கூடும்.

வயிறு பொருமல், குமட்டல், வாய் துர்நாற்றம், நெஞ்செரிச்சல், வாய் வழியாக காற்று வெளியேறும் போது அசௌகரிய உணர்வு. இது போன்ற அறிகுறிகள் ஏற்படும். பெரும்பாலும் இரவு நேரத்தில் வழமையான அளவை விட கூடுதலாக பசியாறினாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.

எம்முடைய உணவில் ஹைட்ரஜன் சல்பைடு எனும் வேதிப்பொருளின் உற்பத்தி அதிகமாக ஏற்படுவதால் இத்தகைய புளித்த ஏப்பம் உண்டாகிறது. சிலருக்கு செரிமான மண்டலம் மற்றும் வாய் பகுதியில் இருக்கும் பாக்டீரியா தொற்று காரணமாகவும் இத்தகைய புளித்த ஏப்பம் ஏற்படக்கூடும்.

சிலருக்கு மன அழுத்தம், குறிப்பிட்ட மருந்துகளின் ஒவ்வாமை காரணமாக பக்க விளைவு ஆகிய காரணங்களாலும் இத்தகைய புளித்த ஏப்பம் ஏற்படக்கூடும்.

வைத்தியர்கள் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அவர்களின் உணவு முறையை கேட்டறிந்து, அதில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுமாறு பரிந்துரை செய்வர். இதனைத் தொடர்ந்து கிரீன் டீயை பருகுமாறு பரிந்துரைப்பர். இதனைத் தொடர்ந்து குடலில் உள்ள நாள பகுதிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு பொருளையும் தொடர்ந்து பாவிக்குமாறு அறிவுறுத்துவார்கள். அதே தருணத்தில் புகை பிடிக்கும் பழக்கம் , மது அருந்தும் பழக்கம்,  பால்மா பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்குமாறும் அறிவுறுத்துவார்கள். 

இதன் பிறகும் உங்களுடைய பாதிப்பு பாதிப்பிற்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால்.. நவீன மருத்துவ தொழில்நுட்பங்களின் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குவர். அத்துடன் இத்தகைய மருந்தியல் சிகிச்சை ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா..!? என்பதற்காக நோயாளிகளை வைத்தியர்கள் ஒரு வார காலம் தொடர்ந்து அவதானிப்பர்.

வைத்தியர் ஸ்ரீ தேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10
news-image

குளுக்கோமா நோய் : 2020 ஆம்...

2025-03-06 04:09:10
news-image

சமச்சீரற்ற இதய துடிப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2025-03-03 14:44:16
news-image

இதய பாதிப்பினை கண்டறிவதற்காக சி டி...

2025-03-01 16:56:34